உலகின் சிறந்த கார் டைட்டிலை வென்றது ஆடி ஏ3 செடான்!!

By Saravana

இந்த ஆண்டின் உலகின் சிறந்த கார் என்ற விருதை ஆடி ஏ3 செடான் கார் பெற்றிருக்கிறது. நியூயார்க்கில் நடந்து வரும் ஆட்டோஷோவில் இந்த விருது அறிவிக்கப்பட்டது. மொத்தம் 23 கார்கள் இந்த விருதை பெறுவதற்கான பட்டியலில் இருந்தன.

அவற்றையெல்லாம் புறந்தள்ளி இந்த ஆண்டின் உலகின் சிறந்த கார் என்ற பெருமையை ஆடி ஏ3 செடான் கார் பெற்றிருக்கிறது. உலகின் 22 நாடுகளை சேர்ந்த ஆட்டோமொபைல் நிபுணர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை கொண்ட நடுவர் குழு, இந்த விருதுக்கு ஆடி ஏ3 காரை தேர்வு செய்து அறிவித்துள்ளது.

இந்தியாவிலும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய ஏ3 செடான் காருக்கு உலகின் சிறந்த கார் விருது கிடைத்திருப்பது வர்த்தக அளவில் ஆடி நிறுவனத்துக்கு பெரும் உதவிகரமாக இருக்கும். குறைவான விலை கொண்ட ஆடி செடான் காராகவும் வர இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த காரை பற்றிய சில விபரங்களை ஸ்லைடரில் கொடுத்துள்ளோம்.

 2வது முறை

2வது முறை

கடந்த 2005ம் ஆண்டில் உலகின் சிறந்த கார் விருதை ஆடி ஏ6 கார் பெற்றது. இதற்கடுத்து, 10 ஆண்டுகளுக்கு பின்னர் உலகின் சிறந்த கார் விருதை பெறும் 2வது ஆடி கார் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுகம்

அறிமுகம்

கடந்த 2011ம் ஆண்டில் ஆடி ஏ3 செடான் காரின் கான்செப்ட் மாடல் ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டுதான் நியூயார்க் ஆட்டோ ஷோவில் உற்பத்தி நிலை மாடல் வெளியிடப்பட்டது.

தலைமுறை மாற்றம்

தலைமுறை மாற்றம்

ஆடி ஏ3 கார் மூன்றாம் தலைமுறை மாடல். ஆனால், முதல் இரண்டு தலைமுறை ஏ3 கார் ஹேட்ச்பேக் வடிவில் வெளிவந்தது. இந்த நிலையில், மூன்றாம் தலைமுறை ஏ3 காரில் முதல்முறையாக செடான் மாடலையும் ஆடி வெளியிட்டது.

 மாடல்கள்

மாடல்கள்

ஆடி ஏ3 கார் சலூன், ஸ்போர்ட்பேக், கேப்ரியோலெட் ஆகிய மாடல்களில் கிடைக்கிறது. விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் ஆடி ஏ3 செடான் கார் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

போட்டியாளர்

போட்டியாளர்

மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ காரின் நேரடி போட்டியாளராக இந்த ஏ3 செடான் காரை கூறலாம். இது 4.4 மீட்டர் நீளம் கொண்ட சொகுசு செடான் கார்.

 பாதுகாப்பான கார்

பாதுகாப்பான கார்

அமெரிக்க நெடுஞ்சாலை காப்பீட்டு கழக அமைப்பு(IIHS) நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் டாப் சேஃப்டி பிக்+ என்ற அதிகபட்ச மதிப்பீட்டை ஆடி ஏ3 செடான் கார் பெற்றிருக்கிறது. மொத்தம் 5 விதமான கிராஷ் டெஸ்ட் சோதனைகளுக்கு இந்த புதிய கார் உட்படுத்தப்பட்டது.

Most Read Articles
மேலும்... #audi #a3 #four wheeler #ஆடி #ஏ3
English summary
Audi is known for building luxurious vehicles and the A3 does not fall short at any front. The German manufacturer's A3 has been declared 2014 World Car Of The Year. The title was declared by industry leading judges from around the World.
Story first published: Friday, April 18, 2014, 10:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X