ஆன்ட்ராய்டு இன்போடெயின்மென்ட் சிஸ்டம்... கூகுளுடன் கூட்டணி அமைக்கும் ஆடி!

By Saravana

ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தை தயாரிப்பதற்காக கூகுள் நிறுவனத்துடன் ஆடி கார் நிறுவனம் கூட்டணி சேர உள்ளது. வரும் 7ந் தேதி லாஸ் வேகாஸ் நகரில் துவங்க இருக்கும் மின்னணு சாதன கண்காட்சியில் இதற்கான அறிவிப்பை இந்த கூட்டணி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக என்விடியா உள்பட வேறு சில தொழில்நுட்ப நிறுவனங்களையும் சேர்த்துக் கொள்ள இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது.

 ஆன்ட்ராய்டு ஓஎஸ்

ஆன்ட்ராய்டு ஓஎஸ்

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை போன்றே இந்த புதிய கார் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தின் மூலம் பல்வேறு வசதிகளை பெற முடியும்.

கூகுள் ப்ளே

கூகுள் ப்ளே

கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து மியூசிக், வீடியோ மற்றும் இதர அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்கான வசதியை இந்த கார் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருக்கும்.

நேவிகேஷன் வசதி

நேவிகேஷன் வசதி

மிகவும் எளிமையான கூகுள் நேவிகேஷன் வசதியை இந்த இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றிருக்குமா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. அடுத்த வாரம் இது பற்றிய முழுமையான தகவல்கள் வெளிவந்துவிடும்.

 ஆப்பிள் ஐஓஎஸ்

ஆப்பிள் ஐஓஎஸ்

கடந்த ஆண்டு ஜூனில் நடந்த சர்வதேச அப்ளிகேஷன் டெவலப்பர்கள் மாநாட்டில் கார்களுக்கான புதிய ஐஓஎஸ் ஒன்றை வடிவமைத்து வருவதாக ஆப்பிள் அறிவித்தது. இதேபோன்று தற்போது ஆடி கார்களுக்காக கூகுள் நிறுவனம் புதிய ஆன்ட்ராய்டு இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தை உருவாக்கி வருகிறது.

சிறப்பு வசதி

சிறப்பு வசதி

ஆப்பிள் ஐஓஎஸ் போல் அல்லாமல் கூகுள் நிறுவனம் உருவாக்கும் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஒவ்வொரு ஆடி கார்களுக்கும் ஏற்றவாறு எளிதாக மாறுபாடுகளை செய்து கொள்ளும் வசதி கொண்டதாக இருக்கும்.

Most Read Articles
English summary
German car major Audi, also the number one luxury carmaker in India, is rumored to be working together with tech giant Google in developing car infotainment systems that run on the latter's Android operating system. The two are said to make a partnership announcement regarding the same at the Consumer Electronic Show (CES) 2014 in Las Vegas that starts on January 7.
Story first published: Thursday, January 2, 2014, 10:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X