அடுத்த ஆண்டு 10 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தும் ஆடி!

Written By:

அடுத்த ஆண்டு 10 புதிய கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு ஆடி கார் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் வெகுவேகமான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது ஆடி. நடப்பு ஆண்டில் முதல்முறையாக ஆடி கார் நிறுவனத்தின் விற்பனை 10,000 என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

Audi Car
 

பிஎம்டபிள்யூ, பென்ஸ் போன்ற நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி மார்க்கெட்டிலும் முதலிடத்தை பிடித்தது. இந்த நிலையில், நம்பர்- 1 இடத்தை தக்க வைத்துக் கொள்ள ஏதுவாக பல புதிய கார் மாடல்களை இந்தியாவிற்கு கொண்டு வருகிறது ஆடி.

அதில், மிகவும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல் ஆடி ஏ3 ஹேட்ச்பேக். இதுதவிர, அனைத்து ரகத்திலும் மாடல்களை நிலைநிறுத்தி விற்பனையில் தொய்வு ஏற்பட்டுவிடாதபடி பார்த்துக்கொள்ள திட்டமிட்டிருக்கிறது.

English summary
German automobile manufacturer Audi, has plans of launching 10 new models in 2015, to maintain its crown as the leader in the luxury car segment in India.
Story first published: Saturday, December 13, 2014, 10:35 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark