புதிய மினி எஸ்யூவி தயாரிப்பில் மூழ்கிய ஆடி... 2016ல் அறிமுகம்!

சொகுசு மார்க்கெட்டில் விலை குறைவான மாடல்கள் மீது அனைத்து கார் நிறுவனங்களும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பாளரான ஆடி, புதிய மினி எஸ்யூவியை தயாரித்து வருகிறது.

தற்போது விற்பனையில் இருக்கும் க்யூ3 சொகுசு எஸ்யூவியைவிட விலை குறைவாக வரும் மாடல் என்பதால் இந்த புதிய மாடல் பற்றி தெரிந்துகொள்ள ஆவல் எழுகிறது. ஆடி நிறுவனத்தின் க்யூ வரிசையில் வரும் விலை குறைவான இந்த புதிய சொகுசு எஸ்யூவி பற்றி தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

ஆடியின் தாய் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய மாடல் வடிவமைக்கப்பட உள்ளது. மேலும், க்யூ-3 எஸ்யூவியின் நீள, அளவுகளை இந்த எஸ்யூவி கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, 2018ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய தலைமுறை க்யூ-3 எஸ்யூவியின் நீள, அகல அளவுகள் அதிகரிப்பதற்கு ஆடி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எஞ்சின்

எஞ்சின்

பெட்ரோல் மாடலில் 140 பிஎச்பி பவரை அளிக்கும் 1.4 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ எஞ்சின், 230 பிஎச்பி பவரை அளிக்கும் 1.8 லிட்டர் எஞ்சின் மற்றும் 230 பிஎச்பி பவரை அளிக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் ஆப்ஷன் கொண்டதாக வர இருக்கிறது. டீசல் மாடலில் 2.0 லிட்டர் எஞ்சின் இரு வித பவர் அவுட்புட் கொண்டதாக இருக்கும். ஒன்று 150 பிஎச்பி பவர் கொண்ட மாடலாகவும், மற்றொன்று 184 பிஎச்பி பவர் கொண்டதாகவும் இருக்கும்.

க்யூ-1 ஸ்போர்ட்

க்யூ-1 ஸ்போர்ட்

ஆடி க்யூ1 எஸ்யூவியின் எஸ்க்யூ-1 என்ற பெர்ஃபார்மென்ஸ் மாடலிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாம். இந்த மாடலில் 231 பிஎச்பி பவரையும், 500என்எம் டார்க்கையும் வழங்கும் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

கேம் சேஞ்சர்

கேம் சேஞ்சர்

தனது மொத்த எஸ்யூவி விற்பனையில் 35 சதவீத பங்களிப்பை இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மூலம் பெறுவதற்கு ஆடி கார் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

அறிமுகம்

அறிமுகம்

2016ம் ஆண்டில் இந்த புதிய மாடலை அறிமுகம் செய்ய ஆடி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சொகுசு கார் மார்க்கெட்டில் விலை குறைவான மாடல்கள் மூலம் வர்த்தகத்தை விரிவுப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஆடி தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. இந்த புதிய மாடல் மூலம், அதிக எண்ணிக்கையிலான புதிய வாடிக்கையாளர்களை பெற முடியும் என்று ஆடி நம்புகிறது.

விலை

விலை

25,000 யூரோ விலையில், அதாவது இந்திய மதிப்பில் ரூ.20 லட்சத்திற்குள் விலை கொண்ட மாடலாக இருக்கும்.

Most Read Articles
English summary
German luxury car maker Audi is working on yet another mass-segment product - the Q1, which will be positioned below the Q3.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X