பிஎம்டபிள்யூ ஐ8 காரின் 'ஸ்மார்ட் கீ' பற்றிய சிறப்பு தகவல்கள்!!

By Saravana

புதிய பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் காரின் சிறப்பம்சங்களை சொல்வதற்கு ஒரு நாள் போதுமா என்று பாடத் தோன்றுகிறது. லேசர் ஹெட்லைட், இலகு எடை கொண்ட பாடி, ஹைபிரிட் தொழில்நுட்பம், மைலேஜ், வசதிகள் என அனைத்து விதங்களிலும் பல புதிய தொழில்நுட்பங்களை பரைசாற்றி நிற்கிறது இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார்.

இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் இந்த புதிய காரின் ஸ்மார்ட் கீ பற்றிய ஒரு படமும், சில தகவல்களும் கசிந்துள்ளன. அதனை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

ஸ்மார்ட் கீ

ஸ்மார்ட் கீ

பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாக தற்போது கார்களுக்கான சாவியை நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன. இதில், ஒரு படி மேலே போயுள்ளது பிஎம்டபிள்யூ. சிறிய திரையுடன் பல்வேறு வசதிகளை கொண்டதாக இந்த ஸ்மார்ட் கீயை வடிவமைத்துள்ளது பிஎம்டபிள்யூ.

வசதிகள்

வசதிகள்

காரின் இருக்கும் எவ்வளவு தூரம் செல்லலாம், காரில் பிரச்னை ஏற்படுவதை தெரிவிக்கும் அலாரம் என இதுபோன்ற எண்ணற்ற வசதிகளை இந்த ஸ்மார்ட் கீயில் இருக்கும் சிறிய எல்இடி திரை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மூலம் பெறும் அனைத்து வசதிகளையும் இந்த சிறிய கையடக்க மின்னணு சாதனமாக டிசைன் செய்யப்பட்டிருக்கும், ஸ்மார்ட் கீ மூலம் பெறும் வகையில் பிஎம்டபிள்யூ வடிவமைத்துள்ளது.

சிறப்பு இட வசதி

சிறப்பு இட வசதி

ஸ்மார்ட் கீயை காருக்குள் வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக இடவசதியும் தரப்பட்டிருக்கிறது. கியர் லிவருக்கு முன்னால் அந்த ஸ்மார்ட் கீ வைத்துக் கொள்வதற்கான இடவசதி கொடுக்கப்பட்டுள்ளது.

கசிந்த தகவல்

கசிந்த தகவல்

இந்த புதிய ஸ்மார்ட் கீ குறித்த படத்தையும், சிறிது தகவல்களையும் பிஎம்டபிள்யூ டிசைன் மையத்திலிருந்து ஒருவர் ரகசியமாக வெளியிட்டிருக்கிறார். இந்த ஸ்மார்ட் கீயில் இருக்கும் கூடுதல் வசதிகள் குறித்து பிஎம்டபிள்யூ விரைவில் தகவல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Story first published: Wednesday, February 19, 2014, 14:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X