வரும் ஜூன் மாதம் முதல் பிஎம்டபிள்யூ ஐ8 கார் டெவிலிரி துவங்குகிறது!

By Saravana

வரும் ஜூன் மாதம் முதல் புதிய ஐ8 ஹைபிரிட் காரின் டெலிவிரி துவங்க இருப்பதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் இந்த புதிய ஹைபிரிட் காருக்கு ஐரோப்பிய மார்க்கெட்டில் முன்பதிவு நடந்து வருகிறது. இந்த ஹைபிரிட் கார் 2.1 லிட்டர் பெட்ரோலுக்கு 100 கிமீ மைலேஜ் தரும் என்று பிஎம்டபிள்யூ கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.

BMW i8

இந்த ஹைபிரிட் கார் 0- 100 கிமீ வேகத்தை 4.4 வினாடிகளில் எட்டிவிடும் என்று அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. தவிர, பிஎம்டபிள்யூவின் லேசர் ஹெட்லைட் தொழில்நுட்பமும் இந்த காரில்தான் அறிமுகமாகிறது.

சாதாரண ஸ்போர்ட்ஸ் கார்களைவிட 50 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை அளிக்க வல்ல இந்த காருக்கு முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

வரும் ஜூன் மாதம் முதல் இந்த காருக்கான டெலிவிரி துவங்க இருப்பதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
BMW has showcased their i8 hybrid plug-in sports car. The German car manufacturer confirms they will start distributing BMW i8 to dealers by 2014 June.
Story first published: Tuesday, March 11, 2014, 16:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X