முதல்முறையாக பிஎம்டபிள்யூ ஐ8 காரில் லேசர் ஹெட்லைட் - சிறப்பம்சங்கள்

By Saravana

பிஎம்டபிள்யூ ஐ8 காரில் லேசர் ஹெட்லைட் ஆப்ஷனல் ஆக்சஸெரீயாக வழங்கப்பட உள்ளது. உலகிலேயே தயாரிப்பு நிலை மாடல்களில் லேசர் ஹெட்லைட்டுடன் வரும் முதல் கார் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாதாரண ஹெட்லைட்டுகள், எல்இடி ஹெட்லைட்டுகளின் வரிசையில் அடுத்த கட்ட ஹெட்லைட் தொழில்நுட்பமாக இது கருதப்படுகிறது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலும் லேசர் ஹெட்லைட் கொண்ட ஐ8 கார்தான் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த ஹெட்லைட் பற்றிய சில முக்கியத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அதிக பிரகாசம்

அதிக பிரகாசம்

சாதாரண ஹெட்லைட்டுகளைவிட பல நூறு மடங்கு கூடுதல் பிரகாசம் கொண்டதாக இருக்கும்.

 ஹை பீம் ரேஞ்ச்

ஹை பீம் ரேஞ்ச்

இந்த லேசர் ஹெட்லைட் 600 மீட்டர் வரை சாலையில் ஒளி வெள்ளத்தை பாய்ச்சும். மேலும், இது ஹை பீம் ஆப்ஷனாக மட்டுமே வழங்கப்பட உள்ளது. லோ பீம் வசதிக்காக எல்இடி விளக்குகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

 தானியங்கி ஹை பீம்

தானியங்கி ஹை பீம்

எதிரில் வாகனங்கள் வருவதை கேமரா மூலம் கண்டறிந்து தானியங்கி முறையில் லேசர் விளக்கின் பிரகாசத்தை கட்டுப்படுத்தும் வசதியும் உள்ளது.

 கண் கூச்சம் இருக்காது

கண் கூச்சம் இருக்காது

பன்மடங்கு கூடுதல் பிரகாசம் கொண்டிருந்தாலும், காரை ஓட்டுபவருக்கும், எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண் கூச்சத்தை ஏற்படுத்தாது என்பது இதன் சிறப்பு.

 மின் சிக்கனம்

மின் சிக்கனம்

அதிக பிரகாசத்தை வழங்கும் என்பதோடு, எல்இடி ஹெட்லைட்டுகளைவிட 30 சதவீதம் கூடுதல் மின் சிக்கனத்தை வழங்கும்.

 அடக்கமான டிசைன்

அடக்கமான டிசைன்

இந்த எல்இடி விளக்குகள் அளவில் சிறியதாக இருப்பதுடன், எடையும் மிக குறைவாக இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

விற்பனை

விற்பனை

இந்தியாவில் இந்த ஆண்டு முதல் கட்டமாக 8 பிஎம்டபிள்யூ ஐ8 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த கார்களை முன்பதிவு செய்பவர்கள் லேசர் ஹெட்லைட்டை ஆப்ஷனலாக பெற முடியும்.

 விலை

விலை

ரூ.3 கோடி விலையில் இந்த புதிய ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Here are some basic facts about BMW i8 that you should know. Built out of composite materials to save weight, the i8 is all about striking the perfect balance between performance & efficiency, sports car like looks & a practical design.
Story first published: Friday, February 14, 2014, 10:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X