இன்னும் 8 புகாட்டி வெய்ரான் ரோட்ஸ்டெர் கார்கள் மட்டுமே மீதமுள்ளன!

இன்னும் 8 புகாட்டி வெய்ரான் ரோட்ஸ்டெர் கார்கள் மட்டுமே விற்பனைக்கு மீதமுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புகாட்டி வெய்ரான் சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் லிமிடேட் எடிசன் மாடலாக அறிவிக்கப்பட்டது.

மொத்தம் 300 கார்கள் மட்டுமே கூபே மாடலில் விற்பனைக்கு விடப்பட்டது. ஆனால், கடந்த 2008ம் ஆண்டு புகாட்டி வெய்ரான் காரின் ரோட்ஸ்டெர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. ரோட்ஸ்டெர் பாடி ஸ்டைலில் 150 புகாட்டி வெய்ரான் கார்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Bugatti Veyron Roadsters

இந்த நிலையில், 300 புகாட்டி வெய்ரான் கூபே கார்கள் 2011ம் ஆண்டுடன் உற்பத்தி முடிந்துவிட்டது. ரோட்ஸ்டெர் காரின் உற்பத்தியும் இன்னும் 5 மாதங்களில் முடிய இருக்கிறது. மேலும், விற்பனைக்காக கைவசம் வெறும் 8 கார்கள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் அதிவேக கார் என்ற பெருமையை பெற்ற புகாட்டி வெய்ரான் கார் தொழில்நுட்பத்தின் உச்சபட்ச மாடலாக புகழப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் புகாட்டி வெய்ரான் காரின் உற்பத்தி முடிவடைய இருக்கும் நிலையில், வெய்ரான் காரின் வாரிசாக சிரோன் என்ற புதிய மாடலை புகாட்டி தயாரித்து வருகிறது.

விரைவில் இந்த புதிய மாடல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கார் 1,500 பிஎச்பி பவர் கொண்டதாக வர இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
The better part of a decade since its introduction, the Bugatti Veyron is approaching the end of its stretch of derestricted Autobahn, with only eight examples of the earth-shattering hypercar still left up for grabs before its successor takes its place.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X