2015ல் பெட்ரோல் கார்களை அதிகம் உற்பத்தி செய்ய தயாரிப்பாளர்கள் திட்டம்!

By Saravana

வரும் 2015ம் ஆண்டில் அதிக அளவில் பெட்ரோல் கார்களை உற்பத்தி செய்ய கார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டதன் எதிரொலியால், டீசல் கார்களை வாங்க இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வம் இருந்து வந்தது. பெட்ரோல் கார்களின் உற்பத்தி வெகுவாக குறைக்கப்பட்டதுடன், டீசல் கார்களின் உற்பத்திக்கு கார் தயாரிப்பாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.

Petrol Cars

சில நிறுவனங்கள் பெட்ரோல் கார்களின் உற்பத்தியை அடியோடு நிறுத்திவிட்டு, டீசல் கார்களை மட்டுமே தயாரிக்கத் தொடங்கின. இந்த நிலையில், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிவிட்டதால், எந்த நேரத்திலும் டீசல் விலையை கணிசமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு இடையிலான விலை வித்தியாசம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனையடுத்து, பெட்ரோல் கார்களின் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. இதையடுத்து, பெட்ரோல் கார்களின் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க கார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

அடுத்த ஆண்டு பெட்ரோல் கார்களுக்கான ஆண்டாக அமையும் என்பது கார் நிறுவனங்களின் அவதானிப்பாக இருக்கிறது.

Most Read Articles
English summary
Car manufacturers are favouring production of petrol engined vehicles as customers are preferring them too, as fuel price difference is narrowing over time.
Story first published: Tuesday, December 23, 2014, 12:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X