இந்தியாவின் பிரச்னைகள் குறைவான சிறந்த கார் மாடல்கள்!

புதிய கார் வாங்கிய முதல் சில மாதங்களில் குறைவான பிரச்னைகள் கொண்ட சிறந்த கார்கள் குறித்த ஆய்வு முடிவுகளை ஜேடி பவர் ஏசியா பசிஃபிக் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. கடந்த காலங்களைவிட கடந்த 2013- 14 ம் ஆண்டு காலக்கட்டத்தில் கார்களில் பிரச்னைகள் குறைந்திருப்பதும், கார்களின் தரம் மேம்பட்டிருப்பதும் இந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் கடந்த ஜூலை மாதம் வரை புதிய கார் வாங்கிய வாடிக்கையாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்ட்டது. புதிய கார் வாங்கி 2 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை ஆன 8,429 வாடிக்கையாளர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. காரில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து கருத்துக்கள் கேட்டறியப்பட்டன.

எஞ்சின், கியர்பாக்ஸ், ஏசி சிஸ்டம், கன்ட்ரோல் பட்டன்கள், ஹேண்டில், டிஸ்ப்ளே, காரின் வெளிப்புறம், இருக்கைகள், ஆடியோ சிஸ்டம் மற்றும் என்டர்டெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் சிஸ்டம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து வாடிக்கையாளர்களிடம் கேட்டறியப்பட்டது.

அதில், கார்களில் ஏற்படும் பிரச்னைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2012- 13ம் ஆண்டில் இந்தியாவில் 100 கார்களுக்கு 115 பிரச்னைகள் இருப்பதாக ஜேடி பவர் ஆய்வு முடிவு தெரிவித்தது. இதுவே 2013- 14ம் ஆண்டு ஆய்வு முடிவில் 100 கார்களுக்கு 100 பிரச்னைகள் என்ற சராசரியாக குறைந்துள்ளது. இதேபோன்று, கடந்த 2010ம் ஆண்டு 100 டீசல் கார்களில் 148 பிரச்னைகள் என்ற சராசரி தற்போது 96 ஆக குறைந்திருக்கிறது.

இந்தநிலையில், ஒவ்வொரு கார் செக்மென்ட்டிலும் குறைவான பிரச்னைகள் கொண்ட கார் மாடல்களின் விபரங்களை ஜேடி பவர் ஏசியா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அந்த விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


சிறந்த கார்கள்

சிறந்த கார்கள்

ஒவ்வொரு செக்மென்ட்டிலும் 100 கார்களில் ஏற்படும் சராசரி பிரச்னைகளில் குறைவான பிரச்னைகள் கொண்ட டாப் - 3 கார் மாடல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் வழங்கியுள்ளோம்.

மாருதி ஆல்ட்டோ 800

மாருதி ஆல்ட்டோ 800

ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் குறைவான பிரச்னைகள் கொண்ட மாடல் என்ற பெருமையுடன் மாருதி ஆல்ட்டோ 800 கார் முதலிடத்தை பெற்றிருக்கிறது. விற்பனையை போன்றே இந்த ஆய்விலும் முதலிடத்தை பெற்றிருப்பது வாடிக்கையாளர்களுக்கும், மாருதிக்கும் மகிழ்ச்சியான விஷயமே. 100 கார்களில் 97 பிரச்னைகள் இருப்பதாக ஜேடி பவர் ஏசியா நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செக்மென்ட்டின் சராசரி பிரச்னைகள் 105 ஆக பதிவாகி இருக்கும் நிலையில், அதனைவிட குறைவான பிரச்னைகள் கொண்ட மாடல் ஆல்ட்டோ 800 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா நானோ

டாடா நானோ

டாடா நானோ கார் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. 100 கார்களில் 114 பிரச்னைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த செக்மென்ட்டின் சராசரியை விட கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.டிசைன், எஞ்சின் போன்றவை இந்த காருக்கு பின்னடைவாக இருக்கின்றன. அதிக மைலேஜ், வசதிகள் ப்ளஸ் பாயிண்ட்டுகளாக உள்ளன.

ஹூண்டாய் இயான்

ஹூண்டாய் இயான்

இந்த செக்மென்ட்டில் குறைவான பிரச்னைகள் கொண்ட டாப்- 3 கார்களில் ஹூண்டாய் இயான் இடம்பெற்றிருக்கிறது. 100 கார்களில் 119 பிரச்னைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஐ10

ஹூண்டாய் ஐ10

காம்பேக்ட் கார் செக்மென்ட்டில் ஹூண்டாய் ஐ10 கார் குறைவான பிரச்னைகளுடன் முதலிடத்தை பெற்றிருக்கிறது. 100 கார்களில் சராசரியாக 84 பிரச்னைகள் இருப்பதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி செலிரியோ

மாருதி செலிரியோ

மாருதியின் புதிய கார் மாடலான செலிரியோ காம்பேக்ட் கார் செக்மென்ட்டில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. 100 கார்களில் சராசரியாக 86 பிரச்னைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஹூண்டாய் சான்ட்ரோ

ஹூண்டாய் சான்ட்ரோ

ஹூண்டாய் சான்ட்ரோ கார் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. 100 கார்களில் சராசரியாக 95 பிரச்னைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஹோண்டா பிரியோ

ஹோண்டா பிரியோ

இந்த செக்மென்ட்டில் முதல் இடத்தை பிடித்தது மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆய்வு முடிவில் மிக குறைவான பிரச்னைகள் கொண்ட மாடல் ஹோண்டா பிரியோதான். 100 கார்களில் சராசரியாக 40 பிரச்னைகள் மட்டுமே காண முடிந்ததாக ஜேடி பவர் ஏசியா நிறுவனத்தின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

 டொயோட்டா எட்டியோஸ் லிவா

டொயோட்டா எட்டியோஸ் லிவா

டொயோட்டா எட்டியோஸ் லிவா கார் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. 100 கார்களில் 83 பிரச்னைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவர்லே பீட்

செவர்லே பீட்

இந்த செக்மென்ட்டில் மூன்றாவது இடத்தை செவர்லே பீட் கார் பெற்றிருக்கிறது. 100 கார்களில் 90 பிரச்னைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட்

பிரிமியம் காம்பேக் வகை கார்களில் மாருதி ஸ்விஃப்ட் முதலிடத்தை பெற்றிருக்கிறது. 100 கார்களில் 78 பிரச்னைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செக்மென்ட்டின் சராசரி 84 புள்ளிகளைவிட குறைவான பிரச்னைகள் கொண்ட மாடல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஃபோக்ஸ்வேகன் போலோ

ஃபோக்ஸ்வேகன் போலோ

பிரிமியம் காம்பேக்ட் வகை மாடல்களில் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இரண்டாவது இடத்தை பெற்றிருக்கிறது. 100 கார்களில் 85 பிரச்னைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஐ20

ஹூண்டாய் ஐ20

பிரிமியம் ஹேட்ச்பேக் கார் செக்மென்ட்டில் ஹூண்டாய் ஐ20 கார் 102 பிரச்னைகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. போட்டியாளர்களான மாருதி ஸ்விஃப்ட் மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ கார்களைவிட ஹூண்டாய் ஐ20 காரில் அதிக பிரச்னைகள் இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருத்துக்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

ஆரம்பநிலை மிட்சைஸ் செக்மென்ட்

ஆரம்பநிலை மிட்சைஸ் செக்மென்ட்

இந்த செக்மென்ட்டில் குறைவான பிரச்னைகள் கொண்ட கார் மாடலாக ஹூண்டாய் எக்ஸ்சென்ட் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்த செக்மென்ட்டின் சராசரி 96 புள்ளிகளாக இருக்கும் நிலையில், இந்த காரில் 86 பிரச்னைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி டிசையர்

மாருதி டிசையர்

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மாருதி டிசையருக்கு இந்த பட்டியலிலும் இரண்டாவது இடமே கிடைத்தது. 100 கார்களில் 88 பிரச்னைகள் இருந்ததாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

டொயோட்டா எட்டியோஸ்

டொயோட்டா எட்டியோஸ்

டொயோட்டா எட்டியோஸ் செடான் கார் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. 100 கார்களில் 100 பிரச்னைகள் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 ஸ்கோட ரேபிட்

ஸ்கோட ரேபிட்

விற்பனையில் பின்தங்கி இருந்தாலும் ஸ்கோடா ரேபிட் மிக குறைவான பிரச்னைகள் கொண்ட கார் மாடலாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் ஹோண்டா பிரியோவுக்கு அடுத்ததாக குறைவான பிரச்னைகள் கொண்ட கார் மாடல் ஸ்கோடா ரேபிட் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் இரண்டாவது இடத்தில் உள்ளது. 100 கார்களில் 68 பிரச்னைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டி

கடந்த மாதம் மாருதி சியாஸ் காரை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடத்துக்கு வந்துவிட்ட ஹோண்டா சிட்டி இந்த செக்மென் கார்களில் குறைவான பிரச்னைகள் கொண்ட மூன்றாவது இடம் பிடித்த மாடலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 கார்களில் 74 பிரச்னைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாப் -3 மாடல்களில் ஹூண்டாய் வெர்னா இடம்பிடிக்க முடியவில்லை.

டெயோட்டோ இன்னோவா

டெயோட்டோ இன்னோவா

இந்த செக்மென்ட்டில் குறைவான பிரச்னைகள் கொண்ட கார் மாடலாக டெயோட்டா இன்னோவா பெருமை பெற்றிருக்கிறது. 100 கார்களில் 64 பிரச்னைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா

இரண்டாவது இடத்தை மாருதி எர்டிகா பெற்றிருக்கிறது. 100 கார்களில் 86 பிரச்னைகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய்

செவர்லே என்ஜாய் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. 100 கார்களில் 102 பிரச்னைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எஸ்யூவி வகை

எஸ்யூவி வகை

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் முதலிடத்தை பிடித்திருக்கிறது. 100 கார்களில் சராசரியாக 92 பிரச்னைகள் இருந்ததாக ஜேடி பவர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர்

இரண்டாவது இடத்தை ரெனோ டஸ்ட்டர் பிடித்திருக்கிறது. 100 கார்களில் 106 பிரச்னைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நிசான் டெரானோ

நிசான் டெரானோ

இந்த செக்மென்ட்டில் நிசான் டெரானோ மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. 100 டெரானோ எஸ்யூவிகளில் 107 பிரச்னைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செக்மென்ட்டில் மஹிந்திர மாடல்கள் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 கார் நிறுவனங்கள்

கார் நிறுவனங்கள்

இந்த ஆய்வில் ஹோண்டா பிரியோவும், ஸ்கோடா ரேபிட் காரும் மிகக் குறைவான பிரச்னைகள் கொண்ட மாடலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, மாருதி மற்றும் டொயோட்டா கார் நிறுவனங்களின் குறிப்பிட்ட மாடல்கள் ஆரம்ப நிலை தர விஷயத்தில் சிறப்பாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.


Most Read Articles
English summary
Overall initial quality in India averages 100 PP100 in 2014, down from 115 PP100 in 2013. Owners are reporting fewer problems across all eight vehicle categories, with the greatest reduction of 5 PP100 in engine and transmission.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X