டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி கார் டெஸ்ட் டிரைவில் டீம் டிரைவ்ஸ்பார்க்!

Written By:

பட்ஜெட் விலையில் ஓர் எம்பிவி கார் இல்லை என்ற குறையை போக்கும் விதத்தில், விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது டட்சன் கோ ப்ளஸ் கார். மாருதி எர்டிகா, ஹோண்டா மொபிலியோ கார்களை தொடர்ந்து, அந்த செக்மென்ட்டில் இடம்பெற இருக்கும் ஓர் முழுமையான காம்பேக்ட் எம்பிவி கார் டட்சன் கோ ப்ளஸ்.

வெறும் 4 மீட்டருக்குள், ஓர் 7 சீட்டர் மாடலாக வரும் டட்சன் கோ ப்ளஸ் காரை கடந்த இரு தினங்களாக உத்தரகாண்ட் சாலைகளில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்து வருகிறோம். பெரும் ஆவலைத் தூண்டியிருக்கும் இந்த காரின் சில டெஸ்ட் டிரைவ் படங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

டட்சன் கோ ப்ளஸ் மீடியா டிரைவ்

டட்சன் கோ ப்ளஸ் மீடியா டிரைவ்

தோற்றத்தில், சற்று பெரிய டட்சன் கோ காரை போல தெரிகிறது. ஆனால், என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள வேண்டாமா?

 எஞ்சின்

எஞ்சின்

டட்சன் கோ காரில் இடம்பெற்றிருக்கும் அதே 1.2 லிட்டர் எஞ்சின்தான். எஞ்சினில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் மற்றும் செயல்திறன் குறித்து டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டில் படிக்கலாம்.

தி பிக் கொஸ்டீன் இஸ்...?

தி பிக் கொஸ்டீன் இஸ்...?

4 மீட்டருக்கும் குறைவான இந்த காரின் இருக்கை அமைப்பு பற்றியே பலருக்கும் ஆவல். அதிலும் குறிப்பாக மூன்றாவது இருக்கை எப்படியிருக்கும் என்பது குறித்து தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகமிருக்கிறது. கேபின் அமைப்பு எப்படியிருக்கிறது என்பதையும் விரைவில் விரிவாக வழங்குகிறோம்.

பூட் ரூம்

பூட் ரூம்

இந்த காரின் பூட்ரூம் மிக நெருக்கடியாகவே இருக்கும் என்பது கணிக்க முடிந்த விஷயம். ஆனால், அதனை வெகுவாக கூட்டிக் கொள்ளும் வசதி இருக்கிறது. அது எவ்வாறு என்பதையும் விரைவில் தெரிந்துகொள்ளலாம்.

விலை

விலை

டட்சன் கோ காரைவிட குறைவான விலை வித்தியாசத்திலேயே இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அது எவ்வளவு இருக்கும் என்பதையும் விரைவில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம். டட்சன் கோ ப்ளஸ் காரை அங்குலம் அங்குலமாக பார்ப்பதற்கும், படிப்பதற்கும் டிரைவ்ஸ்பார்க் தளத்தில் தொடர்பில் இருங்கள்.

 
English summary
The team from Drivespark is currently test driving the latest MPV from Datsun, the Datsun GO+ in the twisty roads of Utrakand. The exclusive road test review about the latest MPV will be available shortly.
Story first published: Wednesday, December 17, 2014, 16:19 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark