டெல்லியில், 29 லட்சம் வாகனங்களை இயக்க முடியாத நிலை!

டெல்லியில், 15 ஆண்டுகளுக்கு முந்தைய வாகனங்களை சாலையில் இயக்குவதற்கு விதிக்கப்பட்ட தடையால், 29 லட்சம் வாகனங்களை சாலையில் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் அதிகரித்து வரும் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக ஆய்வு நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம், 15 ஆண்டுகளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு தடை விதித்தது.

Vehicles Ban

இந்த அதிரடி தடையால் 10 லட்சம் வாகனங்கள் சாலையில் இயக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 29 லட்சம் வாகனங்கள் சாலையில் இயக்குவதற்கு இயலாத நிலையில் உள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் இருக்கும் வாகனங்கள் மட்டுமின்றி, ஹரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு வரும் கான்டிராக்ட் பஸ் மற்றும் டிரக்குகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் இந்த தடை பொருந்தும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

தள்ளுபடியுடன் நியூலான் கார் கேர் செட்!

இந்த தடையால் 20 லட்சம் இருசக்கர வாகனங்களும், கார்கள் உள்பட 8 லட்சம் நான்கு சக்கர வாகனங்களும் இயக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி அரசின் உயர்மட்டக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

இதனிடையே, 15 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பல வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் இயக்குவதற்கு தக்க வகையில் தகுதிச் சான்று அளிக்கப்பட்டிருக்கிறது. இது டெல்லி அரசுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அதுதொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் ஆட்டோமொபைல் செய்திகளை படிக்க தள பக்கத்தில் தொடர்பில் இருங்கள்!

Most Read Articles
English summary
The New Delhi government has asked more than 29 lakh vehicles to be taken off the road after the National Green Tribunal (NGT) ordered a ban on vehicles plying on the road which are older than 15 years.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X