லாஃபெராரியின் ரேஸ் வெர்ஷன் அறிமுகம்... வாங்கினாலும் டெலிவிரி கிடையாது!

By Saravana

ஃபெராரி பிரியர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் லாஃபெராரி காரின் ரேஸ் டிராக் மாடலான ஃபெராரி FXX K ஸ்போர்ட்ஸ் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அபுதாபியில் நடந்த ஃபெராரி கார் உரிமையாளர்களுக்கான கார் பந்தய திருவிழாவில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

அதிசக்திவாய்ந்த எஞ்சின், ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கான பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டதாக வந்திருக்கும் இந்த புதிய மாடல் ரேஸ் டிராக்கில் அதிவேகத்தில் செல்லும் திறன் படைத்ததாக ஃபெராரி உருவாக்கியிருக்கிறது.

ஃபெராரி என்ஸோ காரின் ரேஸ் மாடலான எஃப்எக்ஸ்எக்ஸ் மாடல் போன்றே இந்த ரேஸ் டிராக் மாடலுக்கு எஃப்எக்ஸ்எக்ஸ் கே என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதில், கே என்ற ஆங்கில எழுத்து இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கெர்ஸ் ஹைபிரிட் சிஸ்டத்தை குறிக்கிறது.


 சிறப்பான ஏரோடைனமிக்

சிறப்பான ஏரோடைனமிக்

ஸ்ட்ரீட் மாடலைவிட இந்த கார் சிறப்பான ஏரோடைனமிக்கை வழங்கும் வகையில், ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதனால், லாஃபெராரியைவிட 50 சதவீதம் கூடுதல் டவுன்ஃபோர்ஸை வழங்கும். பைரேலி ஸ்லிக் ரேஸிங் டயர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. 15 இஞ்ச் கார்பன் செராமிக் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

 எஞ்சின்

எஞ்சின்

கெர்ஸ் ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட இந்த காரில் 848 எச்பி பவரை அளிக்கும் 6.3 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இத்துடன் 187 எச்பி பவரை அளிக்கும் எலக்ட்ரிக் மோட்டார்களும் துணைபுரிகின்றன. லாஃபெராரி கார் 950 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ஆனால், இந்த ரேஸ் டிராக் மாடல் 1,035 எச்பி பவரை அதிகபட்சமாக வெளிப்படுத்தும் வல்லமை கொண்ட சக்திவாய்ந்த கார் மாடலாக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த காரில் 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் உள்ளது.

காக்பிட்

காக்பிட்

இந்த ரேஸ் டிராக் வெர்ஷனில் இரண்டு இருக்கைகள் கொண்டது. பக்கெட் இருக்கைகள், எஞ்சின் இயக்கத்தை எளிதாக மாற்றுவதற்கான கன்ட்ரோல் பட்டன்களுடன் கருப்பு நிறத்தில் காட்சி தருகிறது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

ரேஸிங் சைடு ஸ்லிப் ஆங்கிள் கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், எலக்ட்ரானிக் டிஃபரன்சியல், எலக்ட்ரிக் மோட்டாரை தேவைப்படும்போது இயக்கி கூடுதல் சக்தியை பெறுவதற்கான வசதி போன்றவை கொடுக்கப்பட்டிருக்கினஅறன.

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

ஃபெராரி என்ஸோ எஃப்எக்ஸ்எக்ஸ் காரைப் போலவே இந்த காரும் லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்பட உள்ளது. ஆனால், எத்தனை கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளன என்ற விபரத்தை ஃபெராரி இதுவரை வெளியிடவில்லை.

டெலிவிரி கிடையாது

டெலிவிரி கிடையாது

இந்த காரை வாங்கினாலும் வீட்டுக்கு எடுத்து வர முடியாது. ஃபெராரி நிறுவனம் தனது சொந்த பராமரிப்பில் இந்த கார்களை வைத்திருக்கும். இந்த காரின் உரிமையாளர்களுக்காக நடத்தப்படும் டிராக் டே தினத்தில் மட்டும் இந்த காரை வந்து உரிமையாளர்கள் ஓட்டிப் பார்க்க முடியும். எனவே, பணத்தை செலுத்திவிட்டு, ஃபெராரி அழைக்கும்போது மட்டுமே சென்று காரை ஓட்டிப் பார்க்க முடியும்.

 விலை

விலை

இந்திய மதிப்பில் ரூ.15 கோடி விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 போட்டியாளர்

போட்டியாளர்

மெக்லாரன் பி1 காரை இதற்கு நேர் போட்டியாளராக குறிப்பிடுகின்றனர். மேலும், ஃபெராரியின் ஃபியாரானோ ரேஸ் டிராக்கை ஃபார்முலா- 1 காரைவிட அதிவேகத்தில் கடந்து புதிய சாதனையை படைக்கும் என்றும் ஃபெராரி ஆர்வலர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Most Read Articles
English summary
Italian super car maker, Ferrari had announced that it would make vehicles in limited numbers to maintain exclusivity. Now the manufacturer has unveiled its FXX K supercar at Ferrari Finali Mondiali in Abu Dhabi.
Story first published: Thursday, December 4, 2014, 13:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X