ஜீப் செரோக்கீ எஸ்யூவியை இறக்குமதி செய்த ஃபியட்!

Written By:

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக இந்தியாவில் ஜீப் செரோக்கீ எஸ்யூவியை இறக்குமதி செய்துள்ளது ஃபியட்.

பொருளாதார மந்த நிலையால், இந்தியாவில் ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஃபியட் தயக்கம் காட்டி வந்தது.

Jeep Cherokee SUV
 

இந்தநிலையில், வரும் ஆண்டு ஜீப் செரோக்கீ எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஃபியட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக இங்கிலாந்தில் இருந்து ஜீப் செரோக்கீ எஸ்யூவியை இந்தியாவிற்கு தருவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் செரோக்கீ எஸ்யூவி 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

இந்திய மதிப்பில் ரூ.23.5 லட்சம் மதிப்பு குறிப்பிடப்பட்ட இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Italian car maker Fiat is planning to launch the Jeep Cherokee SUV in India by next year. The company has imported one unit of the SUV for research and development purposes.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark