ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு ரீகால்!

By Saravana

காற்றுப்பைகளுக்கான வயரிங் தொழில்நுட்பத்தில் இருக்கும் பிரச்னையை சரிசெய்து தருவதற்காக ஆஸ்திரேலியாவில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி திரும்ப அழைக்கப்பட உள்ளது.

திரும்ப அழைக்கப்பட உள்ள ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகள் சென்னையிலுள்ள ஃபோர்டு ஆலையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டவை. காற்றுப்பை, சைடு இம்பேக்ட் சென்சார் மற்றும் சீட்பெல்ட்டை இறுகச்செய்யும் ப்ரீடென்ஷனர் ஆகியவற்றிற்கான வயரிங் தொகுப்பில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

Ford Ecosport

இப்பிரச்னை காரணமாக, விபத்து ஏற்படும் சமயத்தில் காற்றுப்பைகள் விரிவடையாத நிலை ஏற்படும். இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 26வரை சென்னை ஆலையில் தயாரிக்கப்பட்ட 2,804 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளை திரும்ப அழைப்பதற்கான நடவடிக்கைகளை ஃபோர்டு ஆஸ்திரேலியா துவங்கியிருக்கிறது.

மேலும், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஈக்கோஸ்போர்ட்டிலும் இதே பிரச்னை இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட மாடல்களிலும் ஆய்வுகள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஃபோர்டு இருப்பதாக தெரிகிறது.

Most Read Articles
English summary
Ford India has now announced that they will be recalling their EcoSport, compact SUV, which made its way to Australia. The manufacturer claims approximately 2,804 compact SUVs will be recalled in Australia.
Story first published: Tuesday, December 9, 2014, 12:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X