20,752 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளை திரும்ப அழைக்கும் ஃபோர்டு!

Written By:

எரிபொருள் எடுத்துச் செல்லும் ஹோஸ் குழாயில் இருக்கும் பிரச்னையை சரிசெய்து தருவதற்காக, 20,752 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளை திரும்ப அழைக்கிறது ஃபோர்டு.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் குறிப்பிட்ட வேரியண்ட்டுகளின் எரிபொருள் எடுத்துச் செல்லும் குழாய் துருப்பிடிக்கும் வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளை திரும்ப அழைத்து பரிசோதிக்க ஃபோர்டு முடிவு செய்திருக்கிறது.

Ford Ecosport
 

இதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 20,752 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளை திரும்ப அழைக்க இருப்பதாக ஃபோர்டு கார் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் மாடலின் டைட்டானியம் வேரியண்ட்டில் மட்டும் 19,441 ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.

எரிபொருள் எடுத்துச் செல்லும் குழாய் தவிரத்து, ஏர்பேக் விரிவடைவதில் இருக்கும் பிரச்னையையும் பரிசோதித்து, சரிசெய்து தரப்பட உள்ளதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களை நேரில் தொடர்பு கொண்டு வருவதாகவும் ஃபோர்டு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உங்களது ஈக்கோஸ்போர்ட் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள இந்த பக்கத்திற்கு சென்று Ford Field Service Actions என்ற பகுதியில் உங்களது காரின் வின் நம்பரை கொடுத்து தெரிந்துகொள்ளலாம்.

English summary
Ford, the American carmaker is to recall over 20,700 units of the EcoSport in India over a faulty fuel line and a claimed airbag issue
Story first published: Wednesday, December 17, 2014, 10:02 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark