விட்டதை பிடிக்க பீட் அடிப்படையில் புதிய காம்பேக்ட் செடான்: ஜிஎம் திட்டம்!

By Saravana

செவர்லே பீட் அடிப்படையிலான புதிய காம்பேக்ட் செடான் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

இந்திய மார்க்கெட்டில் செவர்லே பிராண்டின் மார்க்கெட் பங்களிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இதுவரை ரூ.6,552 கோடி வரை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

Chevy Beat

எனவே, இந்தியாவில் வர்த்தக திட்டங்களை மறுபரிசீலனை செய்து வருகிறது ஜெனரல் மோட்டார்ஸ். இதன்படி, இந்தியாவில் விட்ட மார்க்கெட் பங்களிப்பை மீண்டும் பெறும் நோக்கில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது.

வரும் 2017ம் ஆண்டில் புதிய தலைமுறை பீட் காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும், அதன் அடிப்படையில் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட புதிய காம்பேக்ட் செடான் கார் மாடலையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஜெனரல் மோட்டார்ஸ் பரிசீலித்து வருகிறது.

இந்த புதிய மாடல்கள் மூலம் இந்திய மார்க்கெட்டில் இழந்த இடத்தை மீண்டும் பெற முடியும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது. மேலும், இந்தியாவிலிருந்து கார்களை பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்திருக்கிறது.

Most Read Articles
English summary
American carmaker General Motors is reworking its strategy in India due to its rapidly falling market share, losses and low capacity utilisation. The company will focus on exports and entering new segments in India like sub-4 metre sedans. If Project MCM as they call it, goes as per plan, there will soon be a short sedan based on the M300 in the Indian market as well as the new generation Beat hatchback by 2017.
Story first published: Friday, December 5, 2014, 10:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X