அடுத்தக்கட்டத்துக்கு போன கூகுள்... புதிய தானியங்கி கார் மாடலை அறிமுகப்படுத்தியது!

டிரைவரில்லாமல் இயங்கும் காரை கூகுள் வடிவமைத்து சோதனை செய்து வருவது குறித்து ஏற்கனவே செய்திகளை வழங்கியிருக்கிறோம். அந்த கார்கள் டொயோட்டா நிறுவனத்தின் தயாரிப்புகளில் சில மாறுதல்களை செய்து டிரைவரில்லாமல் இயங்கும் தொழில்நுட்பத்துடன் மாற்றங்களை செய்து சோதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஸ்டீயரிங் வீல், பிரேக், ஆக்சிலேட்டர் பெடல்கள் இல்லாமல் வடிவமைக்கப்பட்ட தனது முதல் புரோட்டோடைப் தானியங்கி காரை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. தனது பார்ட்னர்களின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட இந்த காரின் செயல் விளக்க வீடியோவையும் வெளியிட்டுள்ளது.


வண்டு தோற்றம்

வண்டு தோற்றம்

வண்டு போன்ற தோற்றத்துடன் சிறிய அளவிலான கூகுளின் இந்த முதல் புரொட்டோடைப் நிலையிலிருக்கும் தானியங்கி காரை தொடர்ந்து பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்த கூகுள் திட்டமிட்டிருக்கிறது. இந்த காரில் ஸ்டீயரிங் வீல், பிரேக், ஆக்சிலேட்டர் போன்ற எந்த சமாச்சாரங்களுக்கும் வேலையில்லை.

 ரொம்ப சிம்பிள்

ரொம்ப சிம்பிள்

ஸ்டார்ட் பட்டனை அழுத்தி விட்டால் கார் தானாக செல்லும். அவசர காலத்துக்காக எமர்ஜென்ஸி பட்டன் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதை அழுத்தினால் கார் உடனே நின்றுவிடும். தற்போதைய புரொட்டோடைப் கார் மணிக்கு 40 கிமீ வேகம் வரை செல்லும். ஆனால், தயாரிப்பு நிலை மாடல் மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த சிறிய தானியங்கி காரில் 2 பேர் செல்வதற்கான இருக்கை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மன நிம்மதியான பயண அனுபவத்தை இந்த கார் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

அனைத்து திசைகளிலும் 2 கால்பந்தாட்ட மைதானங்கள் அளவிலான தூரத்தில் இருக்கும் அனைத்து பொருட்களையும், அதன் நகர்வுகளையும் கண்டுணர்ந்து இந்த கார் செல்லும் வல்லமை கொண்டதாம். பாதுகாப்பு ஒன்றை மட்டுமே கருப்பொருளாக கொண்டு இந்த காரை உருவாக்கி வருவதாக இந்த தானியங்கி கார் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 100 கார்கள்

100 கார்கள்

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள தானியங்கி கார் போன்று 100 புரோட்டோடைப் தானியங்கி கார்களை தயாரித்து சோதனைகள் நடத்த கூகுள் திட்டமிட்டுள்ளது. அனைத்து பாதுகாப்புச் சோதனைகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுவிட்டால், அடுத்து சில ஆண்டுகளில் இந்த கார்களை சாதாரண சாலைகளில் இயக்க முடியும் என்று கூகுள் தானியங்கி கார் திட்டக் குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

வீடியோ

கூகுள் தானியங்கி காரின் புரோட்டோடைப் மாடலின் செயல்விளக்க வீடியோவை காணலாம்.

Most Read Articles
English summary
Google has been working on self driving cars for quite some time now and the search giant has also demonstrated the still developing technology in test cars.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X