ஹோண்டா அமேஸ் காரின் 'ஆனிவர்சரி எடிசன்' மாடல் அறிமுகம்

By Saravana

ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் விதத்தில் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட செடான் காராக அமேஸ் வந்தது. மாருதி டிசையருக்கு நேரடி போட்டியாக டீசல் மாடலிலும் வந்ததால், வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும், சிட்டி, ஜாஸ், சிவிக் போன்ற கார்களை வைத்து காலந்தள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட ஹோண்டாவுக்கு ஒரே ஆளாக நின்று அமேஸ் விற்பனையில் தோள் கொடுத்து தூக்கி நிறுத்தியது. இந்த நிலையில், அமேஸ் வந்து ஓர் ஆண்டு நிறைவடைவதை கொண்டாடும் விதமாக வந்துள்ள புதிய ஸ்பெஷல் எடிசன் மாடலின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

விற்பனை

விற்பனை

கடந்த 12 மாதங்களில் மட்டும் 80,000 அமேஸ் கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதத்தில் கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் கொண்டதாக புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆக்சஸெரீஸ்கள்

ஆக்சஸெரீஸ்கள்

சிறப்பு பாடி கிட், மர வேலைப்பாடு கொண்ட டேஷ்போர்டு, Anniversary edition என்ற பேட்ஜ் போன்றவை இந்த அமேஸ் காரை ஸ்பெஷல் எடிசன் மாடலாக மாற்றுகிறது.

வேரியண்ட்

வேரியண்ட்

அமேஸ் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் விஎக்ஸ் மற்றும் எஸ் வேரியண்ட்டுகளில் இந்த சிறப்பு ஆக்சஸெரீஸ்கள் கொண்ட மாடல் கிடைக்கும்.

விலை

விலை

சாதாரண அமேஸ் கார்களின் விலையை விட ரூ.71,861 விலையில் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் கிடைக்கும். இது தள்ளுபடியுடன் கொண்ட விலையாக ஹோண்டா அறிவித்துள்ளது.

Most Read Articles
Story first published: Wednesday, April 16, 2014, 3:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X