விற்பனையில் சரசரவென ஒரு லட்சத்தை கடந்த ஹோண்டா அமேஸ்!

By Saravana

விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 16 மாதங்களில் ஒரு லட்சம் அமேஸ் கார்களை விற்பனை செய்து அசத்தியிருக்கிறது. ஹோண்டா கார் நிறுவனம். ஹோண்டாவின் இந்திய விற்பனை வரலாற்றில் இது ஒரு புதிய சாதனையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் எக்ஸ்சென்ட், மாருதி டிசையர் கார்களின் நெருக்கடிக்களுக்கு மத்தியிலும் சிறப்பான விற்பனையை குறைவான மாதங்களில் பதிவு செய்துள்ளது. சிறந்த இடவசதி, நல்ல மைலேஜ், ஹோண்டாவின் நம்பகத்தன்மை, டிசைன் போன்றவற்றால் வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருக்கிறது ஹோண்டா அமேஸ். விற்பனையில் அசத்தி வரும் ஹோண்டா அமேஸ் காரின் சில முக்கிய சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.


இருக்கை அமைப்பு

இருக்கை அமைப்பு

அமேஸ் காரின் பின்புற இருக்கை அமைப்பு பயணிகளுக்கு கூடுதல் இடவசதியை அளிப்பதாக இருக்கிறது. முன்புற இருக்கையை பின்னால் முழுவதுமாக நகர்த்தினாலும் பின்புறம் அமர்ந்திருப்பவர்களுக்கு அதிக தொந்தரவு இல்லை. காரை முதல் பார்ப்பவர்கள் குறிப்பிட்டு சொல்லும் விஷயமும் இதுதான். அதேவேளை, இதன் செக்மென்ட்டில் அதிக பூட் ரூம் கொள்ளளவு கொண்ட மாடலாகவும் குறிப்பிடலாம்.

 வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

வாடிக்கையாளர் தங்களது பட்ஜெட்டுக்கு தகுந்தவாறு வேரியண்ட்டை தேர்வு செய்து கொள்ளும் விதத்தில் பெட்ரோல் மாடல் 6 வேரியண்ட்டுகளிலும், டீசல் மாடல் 4 வேரியண்ட்டுகளிலும் கிடைக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் கார் நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 15.5 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 18 கிமீ மைலேஜையும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டீசல் மாடல் லிட்டருக்கு 25.8 கிமீ மைலேஜ் தரும் என ஹோண்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா சிட்டி காருக்கு அடுத்து இந்தியாவின் அதிக மைலேஜ் கொடுக்கும் டீசல் காராக அமேஸ் திகழ்கிறது.

 வண்ணங்கள்

வண்ணங்கள்

மெஜஸ்டிக் புளூ மெட்டாலிக், கார்னேலியன் ரெட் பியர்ல், அர்பன் டைட்டானியம் மெட்டாலிக், அலபாஸ்டர் சில்வர் மெட்டாலிக், கிறிஸ்டல் பிளாக் பியர்ல், டஃபேட்டா ஒயிட் ஆகிய 6 வண்ணங்களில் விருப்பம் போல் செய்து கொள்ளலாம்.

வாரண்டி

வாரண்டி

அமேஸ் காருக்கு 2 ஆண்டுகள் அல்லது 40,000 கிமீ.,க்கான வாரண்டி வழங்கப்படுகிறது. "ஹோண்டா கேர் மெயின்டெனன்ஸ் பேக்கேஜ்" என்ற பெயரில் வழங்கப்படும் இந்த சிறப்பு பராமரிப்பு திட்டத்துக்காக பெட்ரோல் காருக்கு 9,996 ரூபாயும், டீசல் மாடலுக்கு 15,375 ரூபாயும் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நம்பகத்தன்மை

நம்பகத்தன்மை

ஹோண்டாவின் பிராண்டு மதிப்பும் அமேஸ் காருக்கான வரவேற்பை வெகுவாக கூட்டியதற்கான காரணம். மேலும், விற்பனைக்கு பிந்தைய சேவையில் கூடுதல் உத்தரவாதங்களையும், திட்டங்களையும் ஹோண்டா வழங்குகிறது.

 ஸ்பெஷல் எடிசன்

ஸ்பெஷல் எடிசன்

விற்பனையில் வெகுவேகமாக ஒரு லட்சத்தை கடந்ததை கொண்டாடும் விதமாக விரைவில் அமேஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடலை எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Honda Cars India Ltd. (HCIL), leading manufacturer of premium cars in India, today announced that its family sedan Honda Amaze has crossed the 1 lakh sales milestone. The compact family sedan clocked phenomenal sales since its launch in April 2013 thus crossing this milestone in just 16 months and fastest in HCIL history since its inception in the Indian market.
Story first published: Friday, August 8, 2014, 14:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X