விற்பனையில் புதிய சாதனைகளை புரிந்து வரும் ஹோண்டா அமேஸ்

By Saravana

பெட்ரோல் கார்களை மட்டுமே வைத்து இந்திய மார்க்கெட்டில் தள்ளாடிக் கொண்டிருந்த ஹோண்டாவை தூக்கி நிறுத்திய பெருமை அமேஸ் காரையே சாரும். இந்தியாவில் டீசல் எஞ்சினுடன் ஹோண்டா அறிமுகம் செய்த இந்த புதிய கார் மார்க்கெட்டில் பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதிலிருந்து இதுவரை 88,000 அமேஸ் கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம், சோர்ந்து போய் கிடந்த ஹோண்டா புதிய உற்சாகத்துடன் தற்போது பல புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது.


வெற்றி, வெற்றி

வெற்றி, வெற்றி

ஹோண்டா அமேஸ் கார் வெற்றிகரமான மாடலாகியதற்கான சில காரணங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

டிசைன்

டிசைன்

மாருதி டிசையர் சிறப்பான கார் என்றாலும் அதன் பின்புற டிசைன் குறையாக சொல்லப்படுகிறது. ஆனால், அந்த குறையை அமேஸ் காரில் ஹோண்டா சரி செய்ததுடன், கூடுதல் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் கொண்டதாகவும் வடிவமைத்துள்ளது.

இடவசதி

இடவசதி

செக்மென்ட் லீடரான மாருதி டிசையரைவிட ஹோண்டா அமேஸ் காரின் பின்புற இருக்கை சிறப்பான இடவசதி கொண்டது. உயரமானவர்கள் முன் இருக்கையில் அமர்ந்து இருக்கையை பின்புறம் நகர்த்தினாலும், பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களுக்கு சவுகரியமாக அமரலாம். ஆனால், டிசையரில் இந்தளவு இடவசதி இருக்காது.

எஞ்சின்

எஞ்சின்

அமேஸ் காரின் டீசல் மாடலில் 98 எச்பி சக்தியையும், 200 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது வாடிக்கையாளர்களை மிகுந்த கவர்ந்த அம்சம். மேலும், ஹோண்டாவின் பெட்ரோல் எஞ்சின்கள் மீது இருக்கும் அதே நம்பிக்கையை வாடிக்கையாளர்கள் டீசல் எஞ்சின் மீதும் வைத்துவிட்டதும் விற்பனையில் வெற்றி பெற்றுள்ளதற்கு காரணம். பெட்ரோல் மாடலில் 86 எச்பி சக்தியையும், 109 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

அராய் சான்றுபடி, டீசல் மாடல் லிட்டருக்கு 25.8 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் ரகத்தில் அதிக மைலேஜ் தரும் கார் மாடல் என்பதும் அமேஸுக்கு பெரிய பலமாகிவிட்டது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்று கூறுகிறது. எப்படியிருந்தாலும் நடைமுறையில் சிறப்பான மைலேஜை தரும் காராக இது பெயர் பெற்றுள்ளது.

ஒப்பீடு

ஒப்பீடு

மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார் கார்களின் விலை, சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Most Read Articles
English summary
Honda had launched its compact sedan, which is based on its Brio hatchback. It was the Japanese manufacturers first attempt at an affordable sedan for the masses. The Amaze is available in petrol and also got the first diesel engine produced by the manufacturer.
Story first published: Thursday, June 12, 2014, 10:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X