ராஜஸ்தானில் புதிய ஆலையில் கார் உற்பத்தியை துவங்கியது ஹோண்டா!
ராஜஸ்தான் மாநிலம், தபுகெராவில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய ஹோண்டா கார் ஆலையில் இன்று உற்பத்தி துவங்கியது. முதலாவதாக, அமேஸ் கார் உற்பத்தி பிரிவிலிருந்து வெளிவந்தது.
இந்த புதிய ஆலை திறப்பு விழாவில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே உள்பட அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஹோண்டா நிறுவனத்தின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

450 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஆலை ஆண்டுக்கு 1.20 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ரூ.3,526 கோடி முதலீட்டில் கட்டக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஹோண்டாவின் இரண்டாவது கார் ஆலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஆலையில் உற்பத்தி துவங்கியுள்ளதையடுத்து, ஹோண்டா அமேஸ் காருக்கான காத்திருப்பு காலம் வெகுவாக குறையும்.


Click it and Unblock the Notifications