புதிய ஹோண்டா சிட்டி ஹைபிரிட் மாடலின் மைலேஜ் எவ்வளவு தெரியுமா?

By Saravana

ஜப்பானில் ஹைபிரிட் கார்களுக்கு மவுசு அதிகம். அந்த வகையில், புதிய ஹோண்டா சிட்டியின் ஹைபிரிட் மாடல் அங்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. சிறப்பான மைலேஜ் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுதலை குறைக்கும் அம்சங்கள் கொண்ட இந்த புதிய மாடலில் கூடுதல் சிறப்பம்சங்களையும் சேர்த்து வழங்குகிறது ஹோண்டா கார் நிறுவனம்.

கிரேஸ் என்ற பெயரில் ஜப்பானில் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய ஹோண்டா சிட்டியின் ஹைபிரிட் மாடலில் டிசைனில் சில சிறிய மாற்றங்கள் மட்டுமே தென்படுகின்றன. தவிர, தோற்றத்தில் பெரிய மாறுதல்கள் இல்லை. இந்த காரின் மைலேஜ், சிறப்பம்சங்கள் உள்ளிட்டவற்றை ஸ்லைடரில் காணலாம்.


எஞ்சின்

எஞ்சின்

1.5 லிட்டர் ஐ- விடெக் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன், அதில், எலக்ட்ரிக் மோட்டாரும் இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது 30 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.

மைலேஜ்

மைலேஜ்

புதிய ஹோண்டா சிட்டி ஹைபிரிட் மாடல் கணக்கீடுகளின்படி, லிட்டருக்கு 34.4 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சாதாரண பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17.8 கிமீ மைலேஜ் தரும் நிலையில், ஹைபிரிட் மாடல் அதனைவிட இருமடங்கு கூடுதல் எரிபொருள் சிக்கனம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட மாடல் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வந்திருக்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியரில் அதிக மாற்றங்கள் இல்லை. கியர் செலக்டார் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் பேட்டரி சார்ஜ் லெவலை காண்பிக்கும் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

கூடுதல் பாதுகாப்பு

கூடுதல் பாதுகாப்பு

வெகிக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், கர்டெயின் ஏர்பேக்குகள் நிரந்தர பாதுகாப்பு வசதிகளாக வழங்கப்படுகின்றன.

 விலை

விலை

இந்திய மதிப்பில் ரூ.10.14 லட்சம் விலையில் ஜப்பானில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஹைபிரிட் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இல்லை. எனவே, விரைவில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துவிடும் என்று கூற இயலாது.

Most Read Articles
English summary
The rising environmental concern has made manufacturers looking for alternative solutions. Honda and their engineers too are working on hybrids and alternative fuel options. They have now launched their hybrid version of their City sedan, which has been christened ‘Grace'.
Story first published: Thursday, December 4, 2014, 11:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X