இந்தியாவில் பிரியோ, அமேஸ் கார்களுக்கு ஹோண்டா ரீகால்!

ஏர்பேக் பிரச்னையை சரிசெய்து தருவதற்காக, இந்தியாவில் பிரியோ, அமேஸ் மற்றும் சிஆர்வி எஸ்யூவி மாடல்களை ஹோண்டா கார் நிறுவனம் திரும்ப அழைக்க இருக்கிறது.

ஏர்பேக்கிற்கான இன்ஃப்ளேட்டர் சாதனத்தில் இருக்கும் 'பஃபிள் பிளேட்' என்ற உதிரிபாகம் சரியாக பொருத்தப்படவில்லை என்று கருதப்படுகிறது. இதனால், ஏர்பேக் விரிவடைவதில் பிரச்னை ஏற்படும். இதையடுத்து, 2011ம் ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஜூலை வரையில் தயாரிக்கப்பட்ட கார் மாடல்களை சோதனை செய்ய ஹோண்டா கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Honda Amaze

இதன்படி, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டிருக்கும் 1,040 பிரியோ கார்களும், 1,235 அமேஸ் கார்களும், 63 சிஆர்வி எஸ்யூவிகளும் திரும்ப அழைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஹோண்டா டீலர்களில் பிரச்னைக்குரிய பாகத்தை விலையில்லாமல் மாற்றி தரப்பட உள்ளதாகவும் ஹோண்டா வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 இலக்க வின் நம்பரை வைத்து இந்த திரும்ப பெறும் பட்டியலில் உங்களது ஹோண்டா கார் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Most Read Articles
English summary
Honda Cars India Ltd (HCIL) today announced that it would carry out preventive replacement of Driver Side Air Bag Inflator of 1040 units of Honda Brio, 1235 units of Honda Amaze and 63 units of Honda CR-V manufactured between September 2011 and July 2014 as part of Honda’s global recall regarding a possible incorrect assembly of the Baffle Plate in the Inflator.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X