ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!

By Saravana

விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் விதத்தில், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், விற்பனையில் இந்தியாவின் டாப்-10 கார் பட்டியலிலும் குறுகிய காலத்தில் இடம்பெற்றதுடன், முதல் 10 மாதங்களிலேயே விற்பனையில் 1 லட்சத்தை கடந்து அசத்தியது.

இந்த நிலையில், இந்த வெற்றிகரமான மாடலின் முதலாமாண்டு கொண்டாட்டத்தையொட்டி, ஸ்பெஷல் எடிசன் மாடல் வந்துள்ளது. அதன் சிறப்பம்சங்களின் விபரங்களை படத்திற்கு கீழே காணலாம்.

ஸ்போர்ட்ஸ் எடிசன்

SportZ Edition என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் மாடலில் ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

சிறப்பம்சங்கள்

14 இஞ்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள்
புளுடூத் கனெனக்ட்டிவிட்டி
ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள்
ஸ்டீயரிங் வீலுக்கு லெதர் கவர்
பாடி கிராபிஃபிக்ஸ் ஸ்டிக்கர்
கருப்பு வண்த்திலான பி பில்லர்
இன்டிரியரில் சிவப்பு நிற அலங்காரம்

Hyundai Grand i10

மைலேஜ்

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.9 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 24 கிமீ மைலேஜையும் தரும் என அராய் சான்றளித்துள்ளது.

எஞ்சின் ஆப்ஷன்கள்

பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் கப்பா எஞ்சினும், டீசல் மாடலில் 1.1 லிட்டர் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஸ்பெஷல் எடிசன் மாடலின் விலை விபரம்

பெட்ரோல்: ரூ.5.11,550
டீசல்: ரூ.5,98,554

Most Read Articles
English summary
Hyundai has recently launched its premium hatchback in India the Elite i20. They have witnessed success with almost all of their products. They have now announced having over 1.1 lakh customers of their Grand i10. They are also celebrating the first anniversary of their Grand i10 and have launched a SportZ Edition. The car has also won numerous awards including the Indian Car of the Year 2014. It was launched back in September, 2013 and has been the choice of many.
Story first published: Thursday, September 4, 2014, 9:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X