ஓரங்கட்டேய்... வருகிறது 250எச்பி பவர் கொண்ட புதிய ஐ20 என் கார்!

அதிசக்திவாய்ந்த டர்போ எஞ்சின் கொண்ட ஹூண்டாய் ஐ20 கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. உலகின் பல முன்னணி கார் நிறுவனங்கள் தங்களது வெற்றிகரமான கார் மாடல்களை பெர்ஃபார்மென்ஸ் பிராண்டில் பிரத்யேக அம்சங்களுடன் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.

அந்தவகையில், உலகின் மிக முக்கிய கார் நிறுவனங்களில் ஒன்றாக படுவேகமான வளர்ச்சியை பெற்று வரும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும் N என்ற பிராண்டில் பெர்ஃபார்மென்ஸ் கார்களை வெளியிட உள்ளது. முதலாவதாக ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ20 கார் என் பிராண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என அந்த நிறுவனத்தின் அதிகாரி பாரீஸ் மோட்டார் ஷோவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறினார்.


புதிய எஞ்சின்

புதிய எஞ்சின்

தற்போது WRC கார் பந்தயத்துக்காக ஹூண்டாய் தயாரித்திருக்கும் ஐ20 காரில் இருக்கும் பல்வேறு பிரத்யேக அம்சங்களுடன் என் பிராண்டில் வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வரும் ஹூண்டாய் ஐ20 காரில் பொருத்தப்பட்டிருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

ஹூண்டாய் ஐ20 என் காரில் புதிய 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இது 250 எச்பி பவரை அளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

டர்போசார்ஜர்

டர்போசார்ஜர்

ஹூண்டாய் வெலாஸ்டர் அல்லது கியா ப்ரோசிட் ஜிடி காரின் எஞ்சினுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் டர்போசார்ஜரை ஐ20 என் காரிலும் பொருத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

அதிசக்திவாய்ந்த மாடலாக வரும் ஐ20 என் காரில் பிரத்யேக சஸ்பென்ஷன் அமைப்பு, விசேஷ டயர்கள், சிறப்பான ஏரோடைனமிக்கை வழங்கும் சிறப்பு ஆக்சஸெரீஸ்கள் மற்றும் மாற்றங்களுடன் புதிய ஹூண்டாய் ஐ20 என் கார் வருகிறது.

முழுமையான விபரம்

முழுமையான விபரம்

விலை, அறிமுகம், டிசைன், இன்டிரியர் அம்சங்கள் குறித்த தகவல்கள் ஹூண்டாய் அறிவிப்புக்கு பின்னரே முழுமையாக தெரியவரும்.

Most Read Articles
English summary
According to company official, Hyundai motors is planning to launch more powerful i20 car sometime soon. It will be fitted with 1.6-litre turbo enigne, which will capable to generate 250 horsepowe.
Story first published: Thursday, October 9, 2014, 15:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X