புதிய எம்பிவி காரையும் அறிமுகப்படுத்துகிறது ஹூண்டாய்!

Written By:

புதிய 7 சீட்டர் எம்பிவி காரை அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் புதிய செக்மென்ட்டுகளில் கார்களை அறிமுகம் செய்வதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

Hyundai MPV
 

அடுத்த ஆண்டு புதிய ஐஎக்ஸ்25 காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் ஹேட்ச்பேக் கிராஸ்ஓவர் ரகத்தில் எலைட் ஐ20 கிராஸ் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனைத்தொடர்ந்து, எம்பிவி மார்க்கெட்டிலும் களமிறங்க முடிவு செய்துள்ளது.

2016ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் இந்த புதிய எம்பிவியை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய எம்பிவி மூலம் சிறப்பான எண்ணிக்கையை பெற முடியும் என்றும் அந்த நிறுவனம் கருதுகிறது.

English summary
South- Korean car maker Hyundai motors is planning to launch new MPV in India by 2016.
Story first published: Saturday, December 27, 2014, 14:57 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark