ஹூண்டாய் எக்ஸென்ட் காரில் புதிய 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்!

Written By:

ஹூண்டாய் எக்ஸென்ட் காரில் புதிய 1.4 லிட்டர் சிஆர்டிஐ டீசல் எஞ்சினை பொருத்தி விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் காரின் அடிப்படையிலான செடான் மாடலாக வடிவமைக்கப்பட்டு வந்த ஹூண்டாய் எக்ஸென்ட் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

Hyundai Xcent
 

பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 1.1 லிட்டர் எஞ்சினும் கொண்டதாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டாடா ஸெஸ்ட் கார் மூலமாக ஹூண்டாய் எக்ஸென்ட் காருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மேலும், போட்டியாளர்களான ஹோண்டா அமேஸ் டீசல் மாடல் அதிகபட்சமாக 98 பிஎச்பி பவரையும், டாடா ஸெஸ்ட் டீசல் மாடல் 89 பிஎச்பி பவரையும் அளிக்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. ஆனால், எக்ஸென்ட் காரின் டீசல் மாடல் 71 பிஎச்பி பவரை மட்டுமே அளிக்கும்.

இதனால், வாடிக்கையாளர்கள் பிற மாடல்கள் நோக்கி நகரும் நிலை இருக்கிறது. இதனை மனதில் கொண்டு எக்ஸென்ட் காரில் 1.4 லிட்டர் டீசல் எஞ்சினை பொருத்தி விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஹூண்டாய் வசம் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஏற்கனவே இருக்கிறது. ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் வெர்னா கார்களில் இந்த 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எஞ்சினை தற்போது எக்ஸென்ட் காரிலும் பொருத்தி களமிறக்க ஹூண்டாய் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

English summary
According to reports, Hyundai Motor India is planning to launch more powerful diesel engine for its Xcent compact sedan soon.
Story first published: Saturday, December 27, 2014, 10:35 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark