ஜனவரியில் இந்தியாவை மையம் கொள்ள வரும் ஹூண்டாய் 'கவர்ச்சிப் புயல்'!

ரூ.15 லட்சத்திலான செடான் கார்களை டெஸ்ட் டிரைவ் செய்ய திட்டமிடுகிறோம். டொயோட்டா கரோல்லா, ஸ்கோடா ஆக்டாவியா மற்றும் ஹூண்டாய் எலன்ட்ரா ஆகியவற்றை இறுதியாக தேர்வு செய்து கையில் வைத்துக் கொண்டு, முதலில் ஆக்டாவியாவை டெஸ்ட் டிரைவ் செய்கிறோம். அதன் சாதக, பாதகங்களை மனதில் இறுத்திக் கொள்கிறோம்.

அடுத்த நாள் ஹூண்டாய் ஷோரூமுக்கு செல்கிறோம். அங்கு சென்று முதல்முறையாக எலன்ட்ராவை பார்க்கிறோம். கண்டதும் காதல் என்பார்களே, அதேதான். அடுத்த கணமே மனதை கொள்ளை கொள்ள செய்கிறது எலன்ட்ரா. இதுதான்டா, எனது அடுத்த கார் என்று மனதில் அசரீரி ஒலிக்கிறது. மற்ற கார்களின் பிம்பங்களும் மனதிலிருந்து மெல்ல கரைகிறது. டொயோட்டா கரொல்லா ஆல்டிஸை பார்த்துவிட்டு, முடிவுக்கு வரலாமே என்று நண்பர் கூறியது ஏனோ மனதில் ஏற மறக்கிறது.

போட்டியாளர்களைவிட டிசைனில் பன்மடங்கு முன்னே நிற்கும் எலன்ட்ராவின் அலங்காரத்தை கூட்டினால் எப்படியிருக்கும் என்று நினைக்கும் போதே மனதெல்லாம் தேன் பாய்கிறதல்லவா! ஆம், அப்படியொரு அழகுக்காக கூடுதல் அலங்காரம், சிறப்பம்சங்கள் கொண்டதொரு புதிய எலன்ட்ரா மாடல் அடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. புதிய மாடல் எந்தெந்த வகையில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஸ்லைடரில் காணலாம்.


ரொம்ப தாமதம்

ரொம்ப தாமதம்

ஹூண்டாய் மோட்டார்ஸ் தாயகமான தென்கொரியாவில் எலன்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு கிட்டத்தட்ட ஓர் ஆண்டை நெருங்கிவிட்டது. அங்கு அவேன்டே என்ற பெயரில் விற்பனையில் இருக்கிறது. தாய்லாந்து மார்க்கெட்டிலும் சமீபத்தில் வந்துவிட்டதால், அடுத்தது இந்தியாதான் என்பது ஆட்டோமொபைல் உலகின் எழுதப்படாத விதியாக உள்ளது. எலன்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் என்னென்ன மாற்றங்கள் இருக்கிறது என்பதை அடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

கூடுதல் நீளம்

கூடுதல் நீளம்

புதிய எலன்ட்ரா காரின் நீளம் கூடியிருக்கிறது. முன்பக்க பம்பரின் நீளம் 5 மிமீ, பின்பக்க பம்பரின் நீளம் 15 மிமீ கூடியிருப்பதால் காரின் மொத்த நீளம் 4,550 மிமீ ஆக அதிகரித்துள்ளது.

முகப்பு

முகப்பு

முன்பக்க கிரில், பம்பர் மற்றும் சிறிய அளவில் மாற்றம் கண்டிருக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுடன், எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பது எலன்ட்ராவின் கவர்ச்சியை கூட்டுகிறது. புதிய 17 இஞ்ச் அலாய் வீல்களும் தோற்றத்தின் பொலிவுக்கு புது பலம் சேர்க்கிறது.

 கூடுதல் வசதிகள்

கூடுதல் வசதிகள்

பல நவீன வசதிகள் கொண்ட எலன்ட்ரா காரில் கூடுதலாக வென்டிலேட்டட் இருக்கைகள், 3.5 இஞ்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட் பார்க்கிங் அசிஸ்ட் சிஸ்டம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

இன்டிரியர்

இன்டிரியர்

உட்புறத்தில் சென்டர் கன்சோலிருந்து ஏசி வென்ட்டுகள் இன்னும் மேலே ஏறியிருக்கின்றன. பின்புற பயணிகளுக்கு ரியர் ஏசி வென்ட்டுகளும் புதிய மாடலில் கொடுக்கப்பட்டிருக்கிறது. 3.5 இஞ்ச் ஓஎல்இடி திரை கொடுக்கப்பட்டிருக்கிறது.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

தென் கொரியாவில் மேம்படுத்தப்பட்ட அவென்ட்டே காரில் புதிய 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டீசல் எஞ்சின் 126 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். ஆனால், இந்தியாவில் தற்போது இருக்கும் அதே எஞ்சின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படும்.

ஜனவரியில் ரிலீஸ்

ஜனவரியில் ரிலீஸ்

அடுத்த மாதம் இந்த புதிய மாடல் வர இருப்பதை டீலர் வட்டாரமும் உறுதி செய்துள்ளது. புதுப்பொலிவுடன் வரும் எலன்ட்ரா கார் விலையிலும் சற்று கூடுதலாக நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது.

Most Read Articles
English summary
According to the sources, South-Korean car maker Hyundai motors is planning to launch Elantra facelift in Indian market soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X