இந்தியாவுக்கான புதிய ரெனோ லாட்ஜி எம்பிவி காரின் படம் வெளியானது!

Posted By:

இந்தியாவில், விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் ரெனோ லாட்ஜி எம்பிவி காரின் அதிகாரப்பூர்வமான முதல் படம் வெளியிடப்பட்டுள்ளது.

ரெனோவின் துணை பிராண்டான டேஸியா பிராண்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த எம்பிவி கார் மாடல், தற்போது ரெனோ பிராண்டில் ரீபேட்ஜ் செய்து இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

Reno Lodgy
 

தீவிர சாலை சோதனைகளில் இருந்து வரும் இந்த புதிய எம்பிவி மாடல் மாருதி எர்டிகா, ஹோண்டா மொபிலியோ உள்ளிட்ட மாடல்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும்.

இநத் 7 சீட்டர் எம்பிவி மாடலில் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 85 பிஎச்பி பவரை அளிக்கும். பெட்ரோல் மாடல் குறித்த தகவல் இல்லை.

இருப்பினும், டஸ்ட்டரில் இருக்கும் அதே பெட்ரோல் எஞ்சினுடன் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான விலையில் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏலகிரி மலைப்பாதையில் டெஸ்ட் செய்யப்பட்ட ரெனோ லாட்ஜி வீடியோ!

<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/W8BYVDV2f2Y" frameborder="0" allowfullscreen></iframe></center> 

English summary
French carmaker, Renault has revealed the first official picture of its yet to launch MPV Lodgy for Indian market. The vehicle will be rolled out in the early 2015. Stay tuned for latest updates. &#13;

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark