உலகின் அதிவேக மண் அள்ளும் எந்திரமாக வாகை சூடிய ஜேசிபி ஜிடி!

By Saravana

உலகின் அதிவேக மண் அள்ளும் எந்திரம் என்ற பெருமையை ஜேசிபி ஜிடி பெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடந்த நிகழ்ச்சியில் இந்த புதிய சாதனையை ஜேசிபி ஜிடி எந்திரம் நிகழ்த்தியது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், ஆஸ்திரேலியாவின் ஒபேரா ஹவுஸ், ஹார்பர் பிரிட்ஜ் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா மையங்களுக்கு ஜேசிபி ஜிடி கொண்டு செல்லப்பட்டு புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஜேசிபி ஜிடி சாதனை வேகம், சிறப்புகளை ஸ்லைடரில் காணலாம்.


பிரேத்யேக மாடல்

பிரேத்யேக மாடல்

ஜேசிபி ஜிடி என்பது இதுபோன்று சாதனைகளை நிகழ்த்துவதற்கான அம்சங்களை கொண்ட ஃபெர்ஃபார்மென்ஸ் வகை மாடல். 1988ம் ஆண்டு ஜேசிபி ஜிடி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. ஃபைபர்கிளாஸ், அலுமினியம் பாகங்கள் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போதைய மாடல் முழுவதுமாக அலுமினிய பாகங்கள் பயன்படுத்தப்படுகிறது. செவர்லேயின் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

வேகம்

வேகம்

சிட்னி நகரின் அருகிலுள்ள பாதர்ஸ்ட் என்ற இடத்தில் உள்ள டிராக்கில் மணிக்கு 116.82 கிமீ வேகத்தில் சென்று இந்த உலக சாதனையை ஜேசிபி ஜிடி படைத்திருக்கிறது. மணிக்கு 110 கிமீ வேகம் வரை செல்வதற்கு கின்னஸ் சாதனை அமைப்பு இலக்கு கொடுத்தனர். ஆனால், அதைவிட அதிக வேகத்தில் சென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ஜேசிபி ஜிடி எந்திரம்.

 பிரபலபடுத்திய பணியாளர்

பிரபலபடுத்திய பணியாளர்

முதல்முறையாக இந்த மாடலை ஜேசிபி நிறுவனத்தின் பணியாளர் மால்கம் கிரின்டி என்பவர் உலகம் முழுவதும் எடுத்துச் சென்று சிறப்புகளை பிரபலப்படுத்தினார். 1990ல் ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரீ ஃபார்முலா - 1 கார் பந்தயத்திலும் இதன் சிறப்புகளை மால்கம் பார்வையாளர்களுக்கு காட்டினார். தற்போது 61 வயதாகும் மால்கம், ஜேசிபி ஜிடி பற்றிய தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதோடு, உலகின் அதிவேக மண் அள்ளும் எந்திரம் என்ற பெருமையை பெற்றது குறித்து பெரும் மகிழ்ச்சி தெரிவித்தார். நவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட மாடல்தான் சாதனை படைத்திருக்கிறது.

வீரர்

வீரர்

ஜேசிபி ஜிடி எந்திரத்தை மாத்யூ லூகாஸ்(43) செலுத்தி இந்த உலக சாதனையை படைத்திருக்கிறார். இதுபோன்ற ஒரு மகத்தான சாதனை திடத்தில் இடம்பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.

விற்பனையிலும் சாதனை

விற்பனையிலும் சாதனை

கடந்த 14 ஆண்டுகளாக உலக அளவில் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது ஜேசிபி எந்திரம். மேலும், கடந்த 61 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் அதிகமான மண் அள்ளும் எந்திரங்களை ஜேசிபி நிறுவனம் உற்பத்தி செய்திருக்கிறது. உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பம், செயல்திறன் ஆகியவை ஜேசிபி எந்திரங்களுக்கு சிறந்த வரவேற்பு இருப்பதாக அந்த நிறுவனத்தின் பசிஃபிக் பிராந்திய நிர்வாக இயக்குனர் ஃபேப் கரீட்டின் தெரிவித்தார்.

Most Read Articles
English summary
The JCB GT - originally designed to perform high-speed wheelies at racing events, made the attempt in front of independent record officials at Bathurst, near Sydney. Guinness World Records confirmed that the powerful JCB digger was officially the fastest backhoe loader in the world with a speed of 72.58 mph (116.82km/h).
Story first published: Wednesday, December 3, 2014, 13:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X