புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் அறிமுகமானது- முழு விபரம்

By Saravana

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் சொகுசு எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் பின்தங்கி வரும் ஃப்ரீலேண்டர் எஸ்யூவிக்கு மாற்றாக இந்த புதிய மாடல் பல்வேறு மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு செல்கிறது.

மேலும், ரேஞ்ச்ரோவர் பிராண்டில் பல மாடல்களை விற்பனை செய்வது போன்றே டிஸ்கவரி பிராண்டிலும் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய லேண்ட்ரோவர் திட்டமிட்டுள்ளது. அதில், முதலாவதாக வந்திருக்கும் மாடல்தான் டிஸ்கவரி ஸ்போர்ட். பெரும் எதிர்பார்ப்புடன் லேண்ட்ரோவர் பெருமிதத்துடன் களமிறக்கியிருக்கும் இந்த புதிய சொகுசு எஸ்யூவியின் முக்கிய அம்சங்களையும், படங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்கள்

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் குறித்த கூடுதல் தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

முகப்பு

முகப்பு

டிஸ்கவரி ஸ்போர்ட் முகப்பு மிக கம்பீரமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. கம்பீரத்துக்கும், வசீகரத்துக்கும் காரணகர்த்தாவாக விளங்குவது இதன் ஹெட்லைட்டும், எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகளுமே. முகப்பு கிரில்லில் லேண்ட்ரோவர் சின்னம் சிறியதாக கொடுக்கப்பட்டிருக்கிறது. பானட்டில் டிஸ்கவரி பிராண்டு பேட்ஜ் பதிக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் ஒரு சொகுசு எஸ்யூவியின் பந்தா முகப்பில் தெரிகிறது.

 பக்கவாட்டு டிசைன்

பக்கவாட்டு டிசைன்

சிறிது பின்புறமாக சாய்ந்த கூரை, பெரிய வீல் ஆர்ச்சுகள், அலாய் வீல்கள் டிசைன் கெத்தை கொடுக்கிறது.

பின்புறம்

பின்புறம்

பிற லேண்ட்ரோவர் மாடல்களிலிருந்து இதன் பின்புற டிசைன் சற்று மாறுபட்டதாகவும், புதியதாகவும் இருக்கிறது. முன்புறத்தில் இருந்த எல்இடி விளக்கு வளையம் டெயில் லைட்டுகளிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, பிரேக் லைட்டுகளாக அவை இருக்கும். இரட்டை எக்ஸ்சாஸ்ட் பைப்புகள், ஸ்கிட் பிளேட் போன்றவையும் எஸ்யூவி தோரணையுடன் கலக்கலாக இருக்கிறது.

டேஷ்போர்டு

டேஷ்போர்டு

தரமிக்க பிளாஸ்டிக்குகள், டிரைவர் எளிதாக இயக்கும் வகையிலான சென்ட்ரல் கன்சோல் சுவிட்சுகள், பெரிய ஸ்டீயரிங் வீல் போன்றவை குறிப்பிட்டு கூறலாம். பிரிமியம் லெதர் ஃபினிஷிங் போன்றவையும் கவர்கிறது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

5 பெரியவர்களும், 2 சிறியவர்களும் அமரும் வகையில் பக்கெட் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. தரமான லெதர் இருக்கைகள் மென்மையையும், சொகுசான பயணத்துக்கு உத்தரவாதம் தரும்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

பெடஸ்ட்ரியன் ஏர்பேக், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்ஸி பிரேக் சிஸ்டம், டெர்ரெய்ன் ரெஸ்பான்ஸ் தொழில்நுட்பம் மற்றும் 600மிமீ ஆழம் வரை தண்ணீரில் செல்லும் வகையிலான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியில் 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 187.32 எச்பி பவரை அளிக்கும் இந்த எஞ்சினுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மின்ஷன் மூலம் பவர் சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது.

 விலை விபரம்

விலை விபரம்

இங்கிலாந்தில் லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியின் பேஸ் மாடல் ரூ.29.91,900 விலையிலும் டாப் மாடல் ரூ.32,30,754 விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 
Most Read Articles

English summary
Land Rover has been teasing the world with videos and images of its latest Discover Sport. They had recently announced their new Brand Ambassador, survival expert Bear Grylls. The new vehicle is based on the Freelander, which was launched roughly 17 years ago. They have revamped the vehicle and have given it a new name 'Land Rover Discovery Sport'.
Story first published: Thursday, September 4, 2014, 16:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more