டாடா ஸெஸ்ட் டீசல் காரின் ஏஎம்டி மாடலுக்கு நீண்ட க்யூ...!!

எதிர்பார்த்தது போலவே டாடா ஸெஸ்ட் டீசல் காரின் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்(ஏஎம்டி.,) கொண்ட மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சிறப்பான தோற்றத்தில் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய டாடா ஸெஸ்ட் காம்பேக்ட் செடான் காரில் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய காம்பேக்ட் செடான் காருக்கு பெரிய அளவில் விளம்பர நுட்பங்களையும் டாடா மோட்டார்ஸ் மேற்கொண்டுள்ளது.

Tata Zest

இந்தநிலையில், டாடா ஸெஸ்ட் டீசல் காரின் ஏஎம்டி மாடலுக்கு வாடிக்கையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இந்த மாடலுக்கு 3 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதான் இந்திய மார்க்கெட்டில் குறைந்த விலை கொண்ட டீசல் செமி ஆட்டோமேட்டிக் மாடல் என்பதும் வாடிக்கையாளர்களிடத்தில் அதிக ஆர்வம் காணப்படுகிறது.

மாருதி செலிரியோ காருக்கு ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷனை சப்ளை செய்யும் இத்தாலியின் மேக்னடி மரெல்லி நிறுவனம்தான் டாடா ஸெஸ்ட் காருக்கு ஏஎம்டி டிரான்ஸ்மிஷனை சப்ளை செய்கிறது. எனவே, சப்ளையில் சிக்கல் எழுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Tata Motors latest car Tata Zest is receiving huge response from Indian buyers. This increased interest is also leading to a high waiting period for the diesel automatic Zest sedan. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X