சுவீடனின் சாப் கார் நிறுவனத்தை கையகப்படுத்த மஹிந்திரா தீவிரம்!

By Saravana

சுவீடன் நாட்டை சேர்ந்த சாப் கார் நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சிகளில் மஹிந்திரா கார் நிறுவனம் தீவிரமாக இறங்கியிருக்கிறது.

நாட்டின் மிகப்பெரிய யுட்டிலிட்டி பயணிகள் வாகனத் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா சர்வதேச அளவில் வர்த்தக விரிவாக்கப் பணிகளில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.

Saab Car

சில ஆண்டுகளுக்கு முன் தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் நிறுவனத்தை கையகப்படுத்திய மஹிந்திரா, சமீபத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீஜோ இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனத்தை கையகப்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, தற்போது சுவீடன் நாட்டை சேர்ந்த பழமையான கார் தயாரிப்பு நிறுவனமான சாப் நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

நிதிநெருக்கடியில் சிக்கிய சாப் நிறுவனம் தற்போது நேஷனல் மாடர்ன் எனர்ஜி ஹோல்டிங்க்ஸ் என்ற முதலீட்டு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுவீடனை சேர்ந்த நேஷனல் எலக்ட்ரிக் வெகிக்கிள் என்ற நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

மஹிந்திரா மட்டுமின்றி சீனாவை சேர்ந்த டான்ஃபெங் என்ற நிறுவனமும் சாப் கார் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary

 Mahindra automobile has been trying for a while to acquire an international brand. They were earlier in the run to acquire Aston Martin. Now the Indian manufacturer has made its intention clear of acquiring Swedish automobile manufacturer Saab.
Story first published: Saturday, December 13, 2014, 12:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X