ராணுவத்திற்கு 4,100 மாருதி ஜிப்ஸி எஸ்யூவிகளை சப்ளை செய்யும் மாருதி!

By Saravana

ராணுவ பயன்பாட்டிற்காக 4,100 ஜிப்ஸி எஸ்யூவிகளை சப்ளை செய்வதற்கான ஆர்டரை மாருதி கார் நிறுவனம் பெற்றிருக்கிறதது. இதுவரை பாதி எண்ணிக்கையிலான மாருதி ஜிப்ஸி எஸ்யூவிகளை டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 4 மாதங்களில் மீதமுள்ள ஜிப்ஸி எஸ்யூவிகளை டெலிவிரி கொடுக்கப்பட்டு விடும் என்றும் மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இதுதான் மாருதி ஜிப்ஸி எஸ்யூவிக்கு கிடைத்த மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஆர்டர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜிப்ஸியை மேம்படுத்தும் எண்ணம் இல்லை என்று மாருதி தெரிவித்தது. மேலும், ராணுவத்திற்கான சப்ளையை நிறுத்தவும் முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால், திடீரென மீண்டும் ஜிப்ஸியை ராணுவத்திற்கு சப்ளை செய்து வருகிறது மாருதி.


அறிமுகம்

அறிமுகம்

கடந்த 1985ம் ஆண்டு மாருதி ஜிப்ஸி எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. வடிவம், செயல்திறன் போன்றவற்றை கண்டு 1991ம் ஆண்டு முதல் ஜிப்ஸி எஸ்யூவி இந்திய ராணுவம் ஆர்டர் செய்து வாங்கி வருகிறது. கடந்த 2012ம் ஆண்டில் 1,000 ஜிப்ஸி எஸ்யூவிகளை ராணுவம் ஆர்டர் செய்து வாங்கியது. அதைத்தொடர்ந்து, இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக 4,100 ஜிப்ஸி எஸ்யூவிகளுக்கு ஆர்டர் தரப்பட்டிருக்கிறது.

பிரத்கே ஆக்சஸெரீகள்

பிரத்கே ஆக்சஸெரீகள்

ராணுவத்திற்கு சப்ளை செய்யப்படும் மாடலில் போர்க்காலங்களில் வீரர்கள் பின்தொடர வசதியாக கன்வாய் விளக்குகள், ஏவுகணை ஏவு எந்திரங்களை இழுத்துச் செல்வதற்கான கட்டமைப்பு வசதிகள் மற்றும் துப்பாகிக்களை பின்புறத்தில் பொருத்திக் கொள்வதற்கான பிரத்யேக ஆக்சஸெரீகள் பொருத்தப்பட்டிருக்கும்.

தேவை அதிகம்

தேவை அதிகம்

ராணுவம் மட்டுமின்றி, விமானப்படை, கப்பற்படை, துணை ராணுவப்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினரிடமிருந்தும் மாருதி ஜிப்ஸிக்கு ஆர்டர் கொடுக்கப்படுகிறது. ஆனால், அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று மாருதி தெரிவித்துள்ளது.

பெட்ரோல் எஞ்சின்

பெட்ரோல் எஞ்சின்

மாருதி ஜிப்ஸி பெட்ரோல் மாடலில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காம்பேக்ட் எஸ்யூவி மாடலில் 80 பிஎச்பி பவரையும், 103 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஜிப்ஸிக்கு கல்தா

ஜிப்ஸிக்கு கல்தா

புதிய பிளாட்ஃபார்மில் ஜிப்ஸியை மேம்படுத்த மாருதி விரும்பவில்லை. ஏனெனில், புதிய பிளாட்ஃபார்மில் மேம்படுத்தப்படும் மாடலின் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்காது என்பதும், அதனால், அதற்கான முதலீட்டை திரும்ப பெறுவது கடினம் என்று மாருதி கருதுகிறது.

புதிய மாடல்

புதிய மாடல்

ராணுவத்திற்கு வழங்கப்படும் மாருதி ஜிப்ஸி 500 கிலோ எடை கொண்ட பொது ராணுவ வாகன வகையை சேர்ந்தது. ஆனால், 800கிலோ எடை பிரிவில் டாடா மோட்டார்ஸ், நிசான், மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் ரூ.30,000 கோடிக்கு மதிப்பிலான வாகன சப்ளை ஆர்டரை பெற விண்ணப்பித்துள்ளன. இந்த நிலையில், ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏசி, பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங் உள்ளிட்ட வசதியுடன் 800 கிலோ எடை கொண்ட புதிய மாடலை ராணுவத்திற்காக மாருதி தயாரிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலிவுட்டை கவர்ந்த ஜிப்ஸி

பாலிவுட்டை கவர்ந்த ஜிப்ஸி

தனிநபர் மார்க்கெட்டில் ஜிஸ்பி விற்பனையில் இருந்தாலும், விற்பனையில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆனால், இந்த எஸ்யூவியை ஆஃப்ரோடு பயண விரும்பிகள் வாங்கி பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் இமாலயா ராலி பந்தயத்தில் பங்கேற்பதற்காக பாலிவுட் நடிகர் சோகைல் கான் ஜிப்ஸியை முழுவதுமாக கஸ்டமைஸ் செய்து வாங்கியதாக மாருதி தெரிவித்துள்ளது. இதேபோன்று, பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாமிடமும் ஒரு கஸ்டமைஸ் செய்யப்பட்ட மாருதி ஜிப்ஸி உள்ளது.

Most Read Articles
English summary
The Indian Army has placed an order for over 4,100 units of the Maruti Gypsy, the biggest order for the car till date.
Story first published: Monday, December 8, 2014, 11:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X