பங்காளிகளிடம் மண்ணை கவ்விய மாருதி ஆல்ட்டோ கார்

கடந்த 20 ஆண்டுகளாக இந்திய கார் மார்க்கெட்டில் விற்பனையில் நம்பர்-1 ஆக மாருதி ஆல்ட்டோ கார் விளங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் மாருதி ஆல்ட்டோ காரின் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.

இதனால், விற்பனையில் முதலிடத்தில் இருந்து வந்த ஆல்ட்டோ கார் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆல்ட்டோ கார் விற்பனை கடுமையாக சரிந்திருப்பது மாருதி கார் நிறுவனத்தை கவலைகொள்ள செய்துள்ளது. இருப்பினும், ஆல்ட்டோ கார் இடத்தை டிசையர் மற்றும் ஸ்விஃப்ட் கார்களே பிடித்தன. இது மாருதிக்கு ஆறுதலான விஷயமாக உள்ளது.


சிறிய கார்களுக்கான மவுசு குறைகிறதா?

சிறிய கார்களுக்கான மவுசு குறைகிறதா?

சிறிய கார்களுக்கான மவுசு குறைந்து வருவதற்கான ஆதாரங்கள் மற்றும் ஆல்ட்டோ, ஸ்விஃப்ட், டிசையர் கார்களின் விற்பனை விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

 நம்பர்- 1

நம்பர்- 1

ஆல்ட்டோவை பின்னுக்குத் தள்ளி நம்பர்-1 இடத்தை மாருதி டிசையர் பெற்றிருக்கிறது. ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார்களின் வருகைக்கு மத்தியிலும் டிசையர் விற்பனை தொடர்ந்து முன்னிலையில் இருப்பது மாருதிக்கு தெம்பை கொடுத்துள்ளது. கடந்த மாதம் 18,953 டிசையர் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது.

இரண்டாமிடத்தில்...

இரண்டாமிடத்தில்...

இரண்டாமிடத்தை மாருதியின் மற்றொரு மாடலான ஸ்விஃப்ட் கார் பிடித்தது. கடந்த மாதம் 17,936 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகியுள்ளன. இதற்கு அடுத்த இடத்தையே ஆல்ட்டோ பிடித்தது.

மூன்றாமிடம்...

மூன்றாமிடம்...

மாதத்திற்கு சராசரியாக 20,000 கார்களுக்கு மேல் விற்று வந்த ஆல்ட்டோ காரின் விற்பனை கடந்த மாதம் திடீர் சரிவை கண்டது. கடந்த மாதம் 17,311 ஆல்ட்டோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது மோசமான விற்பனையாக இல்லாவிட்டாலும், மாருதிக்கு கடும் இழப்பை தரும் விஷயமாக கருதப்படுகிறது. செலிரியோ, டட்சன் கோ போன்ற கார்களின் வருகையால் ஆல்ட்டோ காரின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.

டேஸ்ட் மாறுகிறது

டேஸ்ட் மாறுகிறது

புதிய கார் மாடல்களின் வருகையால் நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், கூடுதல் வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஹேட்ச்பேக் மற்றும் காம்பெக்ட் செடான் கார்களின் பக்கம் இந்திய வாடிக்கையாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. ஆல்ட்டோ காரின் விலையை விட இருமடங்கு கூடுதல் விலை கொண்ட டிசையர் மற்றும் அதன் ரக கார்கள் பக்கமே இப்போது காற்று வீசுவது விற்பனை பட்டியல் மூலம் நிரூபணமாகி வருகிறது. இவை அனைத்து ஆல்ட்டோ காரின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இன்னொரு சாட்சி

இன்னொரு சாட்சி

சிறிய கார்களைவிட கூடுதல் வசதிகள் மற்றும் பாதுகாப்பு கொண்ட கார்கள் மீது வாடிக்கையாளர்களின் கவனம் திரும்பியுள்ளதற்கு ஹூண்டாய் நிறுவனத்தின் கார் விற்பனை பட்டியலும் சாட்சியாக அமைகிறது. கடந்த மாதம் ஹூண்டாயின் சிறிய காரான இயான் விற்பனையைவிட, சமீபத்தில் விற்பனைக்கு வந்த எக்ஸ்சென்ட் காம்பெக்ட் செடான் காரின் விற்பனை அதிகம் இருந்தது. கடந்த மாதம் 7,192 எக்ஸ்சென்ட் செடான் கார்கள் விற்பனையாகியது. ஆனால், 6,300 இயான் கார்களை மட்டுமே ஹூண்டாய் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X