மினி டிரக் விற்பனைக்கு தனி டீலர்களை நியமிக்கும் மாருதி!

By Saravana

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி, விரைவில் புதிய மினி டிரக்குடன் இலகு ரக வர்த்தக வாகன சந்தையிலும் களமிறங்க உள்ளது.

புதிய 800சிசி டீசல் எஞ்சின் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் மாடல்களில் புதிய மினி டிரக் வர இருக்கிறது. இந்த நிலையில், மினி டிரக் விற்பனைக்கு தனியாக டீலர்களை நியமிக்க மாருதி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சுஸுகி கேரி மினி டிரக்

கார் மற்றும் மினி டிரக் வாங்கும் வாடிக்கையாளர்களின் தேவைகள் வெவ்வேறானவை என்பதால், இந்த முடிவை எடுத்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹரியானாவில் உள்ள மாருதி ஆலையில் இந்த புதிய மினி டிரக் உற்பத்தி செய்யப்பட உள்ளது. டாடா ஏஸ், மஹிந்திரா மேக்ஸிமோ, பியாஜியோ அபே மற்றும் அசோக் லேலண்ட் தோஸ்ட் ஆகிய மினி டிரக் மாடல்களுடன் மாருதியின் புதிய மினி டிரக் மாடல் போட்டியிடும்.

Most Read Articles
English summary
Maruti Suzuki has decided to set up a separate sales network for its Light Commercial Vehicle (LCV) business, which is to start next year.
Story first published: Wednesday, December 24, 2014, 9:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X