இந்தியாவில் 7 சீட்டர் வேகன் ஆர் எம்பிவியை களமிறக்க மாருதி திட்டம்!

By Saravana

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் டட்சன் கோ ப்ளஸ் காருக்கு நேராக புதிய 7 சீட்டர் எம்பிவி காரை அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்த மோட்டார் கண்காட்சியில் கரிமுன் வேகன் ஆர் என்ற பெயரில் 7 சீட்டர் எம்பிவி கான்செப்ட் மாடலை சுஸுகி நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. இந்த காரையே இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

4 மீட்டர் மாடல்

4 மீட்டர் மாடல்

டட்சன் கோ ப்ளஸ் கார் போன்றே இதுவும் 4 மீட்டருக்குள் அடங்கும் எம்பிவி மாடல். ஒரு ஹேட்ச்பேக் கார் வடிவத்தில் எம்பிவியை உருவாக்கியுள்ளனர்.

7 சீட்டர்

7 சீட்டர்

4 மீட்டர் காராக இருந்தாலும், 7 பேர் பயணிக்கும் வகையில் இருக்கை வசதியை அமைத்துள்ளது சுஸுகி. கடைசி வரிசையில் சிறியவர்கள் அமர்ந்து செல்லும் வகையிலான இடவசதி உள்ளது.

உற்பத்தி

உற்பத்தி

கான்செப்ட் நிலையிலிருந்து உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்வதற்கான இறுதிக்கட்ட முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், இந்த காருக்கான உதிரிபாகங்களை சப்ளை செய்வதற்காக சுஸுகி நிறுவனத்திடமிருந்து சப்ளையர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காம்பேக்ட் எம்பிவி காரில் 1.2 லிட்டர் கே சீரிஸ் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், டீசல் மாடலிலும் இந்த எம்பிவியை அறிமுகம் செய்ய திட்டம் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

விலை

விலை

ரூ.5 லட்சத்தையொட்டிய விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், குடும்பத்தினருக்கு ஏற்ற சிறந்த பட்ஜெட் விலை எம்பிவி காராக இது வரவேற்பை பெறும்.

அறிமுகம்

அறிமுகம்

வரும் 2016ம் ஆண்டில் இந்த புதிய எம்பிவி கார் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அந்த ஆண்டு இறுதியில் அல்லது 2017ல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

 

Most Read Articles

English summary

 Suzuki had their 7-seater Wagon R at 2013 Indonesia Motor Show. It is still in development phase and is expected to be launched by 2017. It will sit beside their Ertiga model, in the MPV segment. The Japanese manufacturer plans to launch new products in every segment.
Story first published: Monday, December 8, 2014, 14:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X