கிளட்ச் பிரச்னை: சியாஸ் கார்களை திரும்ப அழைக்கும் மாருதி

கிளட்ச்சில் இருக்கும் குறைபாட்டை சரிசெய்து தருவதற்காக, சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாருதி சியாஸ் திரும்ப அழைக்கப்பட உள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் மாருதி சியாஸ் செடான் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தநிலையில், சியாஸ் காரின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல்களில் கிளட்ச்சில் குறைபாடுடைய பாகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

Maruti Ciaz

இதையடுத்து, கடந்த மாதம் 7ந் தேதி வரை தயாரிக்கப்பட்ட 3,796 சியாஸ் கார்களை சோதனை செய்வதற்காக மாருதி திரும்ப அழைக்க உள்ளது. குறைபாடுடைய பாகத்தை சர்வீஸ் மையங்களில் மாற்றித் தரவும் மாருதி முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது மாருதி சியாஸ் கார் திரும்ப அழைக்கப்பட உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள மாருதியின் இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பிரத்யேக பக்கத்திற்கு சென்று சேஸீ எண்ணை கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.

மாருதி சியாஸ் ரீகால் ஆன கார்கள் பற்றி தெரிந்துகொள்வதற்கான இணைய பக்கம்!

Most Read Articles
English summary
Maruti Suzuki India Limited will proactively undertake a Service Campaign to inspect a suspected fault and replace the relevant part of clutch operation system of a batch of 3,796 Ciaz (manual transmission) cars. These cars are among those manufactured till 7th November, 2014
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X