விமானம் தாங்கி கப்பலில் அறிமுகமான மஸராட்டி கார்கள்!

By Saravana

ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் உலக அளவில் புகழ்பெற்ற இத்தாலியை சேர்ந்த மஸராட்டி நிறுவனத்தின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. இதையொட்டி பல்வேறு விழாக்களை நடத்துவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான 2014ம் ஆண்டு கார் மாடல்களை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியை சற்று வித்தியாசமாக நடத்திக் காட்டியது மஸராட்டி. அபுதாபி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இத்தாலியின் கடற்படை விமானம் தாங்கி கப்பலான கவோரில் இதற்கான அறிமுக விழாவை நடத்தியது. அந்த விழா குறித்த செய்தித் தொகுப்பை ஸ்லைடரில் சுருக்கமாக காணலாம்.

நூற்றாண்டு விழா

நூற்றாண்டு விழா

கடந்த ஆண்டு டிசம்பர் 1ந் தேதியுடன் மஸராட்டி நிறுவனம் துவங்கப்பட்டு 100 ஆண்டுகளை தொட்டது. இதையொட்டி, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள சிறப்பு முத்திரையை படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மார்க்கெட்

மத்திய கிழக்கு மார்க்கெட்

உயர்ரக கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய கிழக்கு நாடுகள் மிக முக்கியமான மார்க்கெட். எனவே, இதுபோன்ற அறிமுக விழாக்களை மிக பிரம்மாண்டமாக நடத்துகின்றன.

4 கார் மாடல்கள்

4 கார் மாடல்கள்

குவார்ட்ரோபோர்ட்டே, கிப்ளி, கிரான் டூரிஷ்மோ மற்றும் கிரான் கேப்ரியோ ஆகிய 4 கார் மாடல்களை மத்திய கிழக்கு நாடுகளுக்காக அறிமுகம் செய்தது.

 முதல்முறையாக...

முதல்முறையாக...

மத்திய கிழக்கு நாடுகளில் முதன்முறையாக 4 மாடல்களை ஒரே நேரத்தில் மஸராட்டி விற்பனைக்கு விட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Source: 7days in Dubai

வெனினோ அறிமுக விழா

வெனினோ அறிமுக விழா

இதற்கு முன்பாக லம்போர்கினி வெனினோ காரின் அறிமுக விழாவும் இதே கப்பலில் நடந்தது. ஏராளமான விருந்தினர்கள் கலந்து கொண்ட இந்த விழா தொகுப்பை காண்பதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

Most Read Articles
Story first published: Tuesday, January 7, 2014, 10:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X