பென்ஸ் பி கிளாஸ் காரின் ஃபேஸ்லிஃபப்ட் மாடல் அறிமுகம்!

By Saravana

பென்ஸ் பி கிளாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. பாரிஸ் மோட்டார் ஷோவில் இந்த புதிய மாடல் முறைப்படி பொது பார்வைக்கு கொண்டு வரப்படுகிறது.

வெளிப்புறத்தில் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. முன்பக்க பம்பரிலும், ஏர்டேமிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எல்இடி ஹெட்லைட்டுகளும் ஆப்ஷனலாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் மாடலில் எல்இடி ஹெட்லைட் ஆப்ஷனலாகவும் கிடைக்காது.

Benz B Class

பின்புறத்திலும் டெயில் லைட்டுகள், எக்ஸ்சாஸ்ட் குழாய் மற்றும் பம்பரில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 8 இஞ்ச் திரை, 12 வண்ணங்களில் தேர்வு செய்து கொள்ளக்கூடிய ஆம்பியன்ட் லைட் செட்டிங், கீலெஸ் கோ ஆகிய வசதிகளும் உள்ளன.

பி கிளாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட்டில் எலக்ட்ரிக் மாடலும் வருகிறது. இதில், தெஸ்லா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டிருக்கும் மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த மின் மோட்டார் 177 பிஎச்பி பவரை அளிக்கும். இந்த மாதடல் 0- 100 கிமீ வேகத்தை 7.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 161 கிமீ டாப்ஸ்பீடு கொண்டது.

பெட்ரோல் மாடலில் 120 பிஎச்பி பவரை அளிக்கும் 1.6 லிட்டர் எஞ்சின், 208 பிஎச்பி பவர் கொண்ட 2.0 லிட்டர் எஞ்சின் கொண்டதாக இருக்கும். டீசல் மாடலின் பேஸ் வேரியண்ட்டில் ரெனோவின் 90 பிஎஸ் பவரையும், 240 என்எம் டார்க்கையும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இLுதவிர, 175 பிஎச்பி பவர் கொண்ட 2.2 லிட்டர் சிடிஐ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக கிடைக்கும்.

அடுத்த ஆம்டு மத்தியில் இந்தியாவில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Mercedes-Benz has released details and images with the 2015 B-Class facelift set to debut next month at Paris Motor Show.
Story first published: Saturday, September 13, 2014, 12:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X