நவ.25ல் இந்தியாவில் ரிலீசாகிறது புதிய பென்ஸ் சி கிளாஸ் கார்!

வரும் 25ந் தேதி இந்தியாவில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதனிடையே, வரும் 12ந் தேதி முதல் 14ந் தேதி வரை நடைபெற இருக்கும் CeBIT India 2014 முதலாவது கம்ப்யூட்டர் கண்காட்சியில் இந்த மாடல் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

புதிய டிசைன் மற்றும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் வர இருக்கும் இந்த புதிய கார் வாடிக்கையாளர்களின் தேர்வு பட்டியலில் முதன்மையானதாக இருக்கும் என்று மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் எபர்ஹார்டு கெர்ன் தெரிவித்துள்ளார்.


 'பேபி' எஸ் கிளாஸ்

'பேபி' எஸ் கிளாஸ்

புதிய சி கிளாஸ் கார் மாடல் பென்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான மாடலான எஸ் கிளாஸ் காரின் சாயலை கொண்டிருக்கிறது. எனவே, இதனை பேபி எஸ் கிளாஸ் கார் என்று குறிப்பிடுகின்றனர். இன்டிரியரிலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு வருகிறது.

எஞ்சின்

எஞ்சின்

முதலில் பெட்ரோல் மாடலிலும், சில மாதங்கள் கழித்து டீசல் மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. பெட்ரோல் மாடலில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 208 பிஎச்பி பவரையும், 350என்எம் டார்க்கையும் வழங்கும். டீசல் மாடலில் 2.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 168பிஎச்பி பவரையும், 400என்எம் டார்க்கையும் வழங்கும்.

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

இன்டிரியர் மிகவும் உயர்தரத்தை பிரதிபலிக்கும். இந்த காரில் டச்பேடுடன் கூடிய புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கும். இதுபோன்று, எண்ணற்ற சிறப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் புதிய பென்ஸ் சி கிளாஸ் வருகிறது.

 இந்தியாவில் உற்பத்தி

இந்தியாவில் உற்பத்தி

புனேயில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஆலையில் இந்த புதிய சி கிளாஸ் கார் அசெம்பிள் செய்யப்பட உள்ளது. தற்போது விடைபெறும் மாடலிலிருந்து சிறிது கூடுதலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Mercedes-Benz India will be launching its new C-Class on 25th of November, 2014. The German manufacturer will be showcasing its luxury sedan at CeBIT India 2014. It is an IT event and is considered the world's leading business IT event.
Story first published: Thursday, November 6, 2014, 13:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X