ஃபார்முலா- 1 வெற்றி: வீரர்கள் பெயரில் ஸ்பெஷல் பென்ஸ் கார்கள் அறிமுகம்

By Saravana

இந்த ஆண்டு ஃபார்முலா -1 கார் பந்தயத்தில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பதை கொண்டாடும் விதத்தில், தனது அணி வீரர்களின் பெயர்களில் இரண்டு ஸ்பெஷல் எடிசன் கார் மாடல்களை மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஆண்டு ஃபார்முலா- 1 கார் பந்தயத்தில் முதல் இரண்டு இடங்களை மெர்சிடிஸ் பென்ஸ் அணி வென்றிருக்கிறது. மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் முதல் இடத்தையும், நிகோ ராஸ்பெர்க் இரண்டாம் இடத்தையும் பிடித்திருக்கின்றனர். இந்த மகத்தான வெற்றியை கொண்டாடும் விதத்தில், இரு வீரர்களின் பெயரிலும் எஸ்எல்63 ஏஎம்ஜி காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்துள்ளது.


பிரத்யேக வண்ணம்

பிரத்யேக வண்ணம்

லூயிஸ் ஹாமில்டன் பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் எஸ்எல்63 ஏஎம்ஜி கார் கருப்பு நிறத்திலும், நிகோ ராஸ்பெர்க் பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் மாடல் வெள்ளை நிறத்திலும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

இரு வீரர்களின் பெயரிலான இந்த சிறப்பு பதிப்பு மாடல்களில் தலா 19 கார்கள் விற்பனை செய்யப்படும் என்று மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

பிரத்யேக எண்

பிரத்யேக எண்

மொத்தம் 19 பந்தயங்கள் இந்த ஆண்டு நடைபெற்றன. அதனை குறிக்கும் வகையில் 19 கார்களிலும், பிரத்யேக எண்ணும், பந்தயம் நடந்த ரேஸ் டிராக்கின் வரைபட மாதிரியும் இடம்பெற்றிருக்கும்.

ராஸ்பெர்க் கையெழுத்து

ராஸ்பெர்க் கையெழுத்து

ராஸ்பெர்க் எடிசன் கார்களின் டேஷ்போர்டில் ராஸ்பெர்க் கையெழுத்து இடம்பெற்றிருக்கும் என்று மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

 லூயிஸ் ஹாமில்டன் எடிசன்

லூயிஸ் ஹாமில்டன் எடிசன்

லூயிஸ் ஹாமில்டன் எடிசன் மாடலின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் கருப்பு நிறத்திலும், ஆங்காங்கே தங்க வண்ண ஃபினிஷிங்கும் செய்யப்பட்டிருக்கிறது. இருக்கைகளில் தங்க தையல்கள் போடப்பட்டுள்ளன.

ராஸ்பெர்க் எடிசன்

ராஸ்பெர்க் எடிசன்

ராஸ்பெர்க் எடிசன் கார் வெளிப்புறத்தில் வெள்ளை நிறமும், உட்புறத்தில் வெள்ளை மற்றும் சாம்பல் நிற வண்ணம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கைப்பிடிகள், சக்கரங்கள், பம்பர் இன்சர்ட் போன்றவை சாம்பல் நிறத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றனஸ்ரீ டைட்டானியம் கிரே லெதர் இருக்கைகள் கொடுக்கப்பட்டு உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

சாதாரண எஸ்எல்63 ஏஎம்ஜி கார்களில் இருக்கும் அதே 5.5 லிட்டர் வி8 டர்போசார்ஜ்டு எஞ்சின்தான் இந்த சிறப்பு பதிப்பு மாடல்களிலும் இருக்கும். அதிகபட்சமாக இந்த எஞ்சின் 585 எச்பி பவரையும், 900என்எம் டார்க்கையும் வழங்கும்.

சேகரிப்பாளர்களுக்கான மாடல்

சேகரிப்பாளர்களுக்கான மாடல்

கார் சேகரிப்பாளர்களுக்கான மாடலாக இந்த கார்களை விற்பனை செய்ய இருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்துள்ளது. மேலும், ஏஎம்டி டிரைவர் பேக்கேஜ் மற்றும் ஏராளமான சொகுசு வசதிகளை இந்த கார்கள் பெற்றிருக்கும்.

 விலை

விலை

இந்திய மதிப்பில் ரூ.2.47 கோடி விலையில் இந்த கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary

 German automobile manufacturer, Mercedes-Benz, is celebrating its 2014 Formula One Victory with two special edition SL63 AMGs, developed with the team drivers. 2014 World Champion Lewis Hamilton's car is a black one while runner-up, Nico Rosberg's car is a white one.
Story first published: Tuesday, December 2, 2014, 15:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X