ஜனவரி 15ல் விற்பனைக்கு வருகிறது டட்சன் கோ ப்ளஸ் மினி எம்பிவி கார்!

Posted By:

அடுத்த மாதம் 15ந் தேதி டட்சன் கோ ப்ளஸ் மினி எம்பிவி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

4 மீட்டருக்குள் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய 7 சீட்டர் எம்பிவி கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தியுள்ளது.

Datsun Go Plus
  

டட்சன் கோ ஹேட்ச்பேக் காரின் அடிப்படையிலான இந்த கார் பெட்ரோல் மாடலில் மட்டுமே முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

67 பிஎச்பி பவரை அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் டட்சன் கோ ப்ளஸ் கார் வர இருக்கிறது.

4 மீட்டருக்கும் குறைவான இந்த மாடல் வரிச்சலுகை பெறும் என்பதால், பேஸ் மாடல் ரூ.4. லட்சம் விலையில் வரும் என்ற தகவலும் வாடிக்கையாளர் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.

டட்சன் கோ ஹேட்ச்பேக் காரைத் தொடர்ந்து, இரண்டாவது மாடலாக டட்சன் பிராண்டில் கோ ப்ளஸ் கார் வருவது குறிப்பிடத்தக்கது.

டட்சன் கோ ப்ளஸ் மினி எம்பிவி காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

English summary
Datsun will launch the Go+ MPV on 15th January 2015.
Please Wait while comments are loading...

Latest Photos