அனைத்து ஃபெராரி எஃப்எக்ஸ்எக்ஸ் கே கார்களுக்கும் வாடிக்கையாளர்கள் ரெடி!

By Saravana

அனைத்து ஃபெராரி எஃப்எக்ஸ்எக்ஸ் கே கார்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தயாராக இருப்பதாக ஃபெராரி தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் அபுதாபியில் லாஃபெராரி அடிப்படையிலான ரேஸ் டிராக்கில் ஓட்டத்தக்க மாடலாக ஃபெராரி எஃப்எக்ஸ்எக்ஸ் கே கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. 1,035 எச்பி சக்தியை வெளிப்படுத்தும் எஞ்சின் கொண்ட இந்த பிரத்யேகமான மாடலில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மட்டுமே ஃபெராரி விற்பனை செய்ய திட்டமிட்டுளா்ளது.

மேலும், முழுப் பணத்தையும் செலுத்தி காரை வாங்கினால் கூட வீட்டிற்கு காரை டெலிவிரி எடுத்துச் செல்ல முடியாது. ஃபெராரி பராமரிப்பிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில், இந்த காரை பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை ஸ்லைடரில் காணலாம்.


விலை

விலை

3.1 மில்லியன் டாலர் விலையில் விற்பனை செய்ய ஃபெராரி திட்டமிட்டுள்ளது. லாஃபெராரி காரை விட இது ஒரு மில்லியன் டாலர் விலை அதிகம் கொண்டது. இந்த மாடலில் தயாரிக்கப்பட இருக்கும் கார்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தயாராக இருப்பதாக ஃபெராரி தெரிவித்துள்ளது.

 லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

32 கார்களுக்கு வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்ய தயாராக உள்ளதாக ஃபெராரி தெரிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுடனான பேச்சுவாரத்தை முடிந்தபின் எத்தனை கார்கள் உற்பத்தி செய்யப்படும் என்பதை ஃபெராரி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சம் 40 கார்கள் வரை தயாரிக்க ஃபெராரி முடிவு செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உறுதியானத் தகவல் இதுவரை இல்லை.

செயல்திறன்

செயல்திறன்

ஃபெராரியின் ஃபியோரானோ டெஸ்ட் டிராக்கில் ஒரு நிமிடம் 14 வினாடிகளில் ஒரு சுற்றை ஃபெராரி எஃப்எக்ஸ்எக்ஸ் கே கார் கடந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது லாஃபெராரி காரை விட 5 வினாடிகள் குறைவான நேரத்தில் அந்த டெஸ்ட் டிராக்கில் ஒரு சுற்றை கடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 பராமரிப்பு

பராமரிப்பு

இந்த காரை வாடிக்கையாளர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாது. இத்தாலியின் மரெனெல்லாவில் உள்ள ஃபெராரி ஸ்குடேரியா கார் பராமரிப்பு மையத்தில் வைத்து பராமரிக்கப்படும். முதல் இரண்டு ஆண்டுகளுக்கான பராமரிப்பு செலவையும் சேர்த்துதான் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு நாடுகளில் நடைபெறும் ஃபெராரியின் பந்தயங்களில் மட்டும் ஃபெராரி நிறுவனமே இந்த கார்களை எடுத்து வரும். உரிமையாளர்கள் ரேஸ் டிராக்கிற்கு வந்து காரை ஓட்டினால் போதும்.

காட்சி பொருள்

காட்சி பொருள்

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ரேஸ்களில் பங்கேற்க உரிமையாளர் விரும்பாதபட்சத்தில் காரை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர். ஆனால், சாலையில் எடுத்து ஓட்டிச் செல்ல முடியாது. வீட்டில் காட்சிப் பொருளாக மட்டுமே வைத்துக் கொள்ள முடியும்.

Most Read Articles
English summary
Italian sports car maker Ferrari will build no more than 40 FXX K; the actual number depends, Ferrari executives say, on how many people it decides to turn away, because it has at least that many buyers already. 
Story first published: Monday, December 8, 2014, 10:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X