ஜனவரி முதல் நிசான் கார்களின் விலையும் உயர்கிறது!

Written By:

மாருதி, ஹூண்டாய் விலை உயர்வை அறிவித்த கையோடு, நிசான் நிறுவனமும் வழக்கம்போல் விலை உயர்வை அறிவித்துள்ளது.

ஜனவரி முதல் நிசான் மற்றும் டட்சன் கார்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளது. மாடலுக்கு தகுந்தாற்போல் ரூ.11,000 முதல் ரூ.18,000 வரை இந்த விலை உயர்வு இருக்கும்.

Nissan Terrano
 

கார் விற்பனை மந்தமாக இருந்ததால், நீண்ட காலமாக கார் விலையில் கை வைக்காமல் இருந்த நிறுவனங்கள் உற்பத்தி செலவீனம் அதிகரித்திருப்பதை கருதி, விலை உயர்வை கையிலெடுத்துள்ளன.

ஜனவரியிலிருந்து பெரும்பாலான தயாரிப்பாளர்கள் கார் விலையை உயர்த்த இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும். தவிர, கார்களுக்கான கலால் வரிச் சலுகைக்கான காலக்கெடுவும் வரும் 31ந் தேதியுடன் முடிவதும் வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Japanese car maker Nissan has announced that it will increase prices from the 1st of January up to INR 18,000 across its range in India.
Story first published: Friday, December 19, 2014, 11:21 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark