நிசான் சிவிடி டிரான்ஸ்மிஷனின் நன்மைகள் என்னென்ன?!

Continuously variable transmission(CVT) என்ற நவீன தொழில்நுட்பத்திலான ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடல்களை சன்னி மற்றும் மைக்ரா கார்களில் நிசான் விற்பனை செய்துவருகிறது.

சாதாரணமாக பயன்படுத்தப்படும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களைவிட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட இந்த சிவிடி டிரான்ஸ்மிஷனின் நன்மைகள் மற்றும் சிறப்பம்சங்களை பிரபலப்படுத்தும் முயற்சிகளை நிசான் மேற்கொண்டுள்ளது.

நிசான் சிவிடி டிரான்ஸ்மிஷனின் சில நன்மைகளை ஸ்லைடரில் காணலாம்.

சிறப்புகள்

சிறப்புகள்

சாதாரணமாக வழங்கப்படும் 5 ஸ்பீட், 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களைவிட இந்த சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ள சிறப்புகளை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் பார்க்கலாம்.

ஸ்டீல் பெல்ட்

ஸ்டீல் பெல்ட்

எஞ்சின் இயக்கம் ஒரே சுழல் வேகத்தில் கியர் ரேஷியோவுக்கு தகுந்தவாறு ஸ்டீல் பெல்ட் மூலம் இரண்டு புல்லிகள் மேலும், கீழும் நகர்ந்து வேகத்தை கூட்டிக் குறைக்கின்றன. சாதாரண ஆட்டோமேட்டிக் டிரான்மிஷனில் 4,5,6 ஸ்பீட் என்று சில குறிப்பிட்ட கியர் ரேஷியோவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும். சிவிடி டிரான்ஸ்மிஷனில் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச கியர் ரேஷியோ என்ற எல்லைகளை கொண்டு இயங்குகிறது. இதற்கு இடையில் எண்ணற்ற கியர் ரேஷியோக்கள் இருப்பதால் மென்மையையும், சிறந்த செயல்திறனையும் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கும்.

 ஷிஃப்ட் ஷாக்

ஷிஃப்ட் ஷாக்

சாதாரண ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கார்களில் குறிப்பிட்ட கியர் ரேஷியோவை உடனடியாக கண்டறிய இயலாத நிலை உள்ளது. இதனால், ஒரு கியரிலிருந்து மற்றொரு கியருக்கு மாறும்போது சிறிய அதிர்வை உணர நேரிடும். இதனை ஷிஃப்ட் ஷாக் என்று கூறுகின்றனர். ஆனால், சிவிடி டிரான்ஸ்மிஷன் கார்களில் கியர் ஷிப்ட் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதால், மிக மென்மையான ஓட்டுதல் சுகத்தை அனுபவிக்கலாம்.

நீடித்து உழைக்கும்

நீடித்து உழைக்கும்

சிவிடி டிரான்ஸ்மிஷனில் இயக்க நிலை உதிரிபாகங்கள் குறைவு. உராய்வும் மிக குறைவாக இருப்பதால், வெப்பம் உண்டாவதும் வெகுவாக தவிர்க்கப்படுகிறது. இதன்மூலம், டிரான்ஸ்மிஷனில் இருக்கும் உதிரிபாகங்கள் பாகங்கள் நீடித்த உழைப்பையும் வழங்கும்.

அதிக மைலேஜ்

அதிக மைலேஜ்

கியர் மாறும்போது ஏற்படும் ஆற்றல் விரயம் இதில் தவிர்க்கப்படுவதும், சாதாரண ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை விட இது 13 சதவீதம் எடை குறைவு போன்ற காரணங்களால், அதிக மைலேஜை வழங்கும். அனைத்து விதமான சாலைகளிலும் சிறப்பான மைலேஜை வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

சிறந்த செயல்திறன்

சிறந்த செயல்திறன்

இந்த டிரான்ஸ்மிஷன் கியரை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதில்லை. எனவே, மிக விரைவான ஆக்சிலரேஷனை வழங்குகிறது.

Most Read Articles
மேலும்... #nissan #four wheeler #நிசான்
English summary
Nissan India is in the process of promoting its CVT transmission technology available in the NIssan Micra hatchback and the Nissan Sunny sedan. The company claims that its CVT technology has a number of benefits over regular automatic transmissions that feature five, six or seven gears.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X