இந்தியாவில் போர்ஷே கேயேன்ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது!

By Saravana

இந்தியாவில், போர்ஷே கேயென் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்திலும், டிசைனிலும் சில மாற்றங்கள் வந்திருக்கிறது.

2 வித பெட்ரோல் மற்றும் 2 வித டீசல் மாடல்களில் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல் கிடைக்கும். இந்த புதிய மாடல் குறித்த கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


டிசைன் மாற்றங்கள்

டிசைன் மாற்றங்கள்

கேயென் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஹெட்லைட், டெயில்லைட்டுகள், பம்பர் மற்றும் ஏர் இன்டேக் போன்றவற்றின் டிசைனில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. புதிய எக்சாஸ்ட் குழாய்களும் கவர்கிறது. புதிய ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 எஞ்சின்

எஞ்சின்

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. கேயென் எஸ் பெட்ரோல் மாடலில் 414 பிஎச்பி பவரை அளிக்கும் 3.6 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. கேயென் டர்போ மாடலில் 513 பிஎச்பி பவரை அளிக்கும் 4.8 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ளது. டீசல் மாடலை பொறுத்தவரை கேயென் டீசல் மாடல் 241 பிஎச்பி பவரை அளிக்கும் 3.0 லிட்டர் வி6 எஞ்சினுடனும், கேயென் எஸ் மாடல் 380 பிஎச்பி பவரை அளிக்கும் 4.2 லிட்டர் வி8 எஞ்சினுடன் கிடைக்கும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

பை- ஸினான் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் பூட் லிட், 4 ஸோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், பானரோமிக் சன்ரூஃப், பேடில் ஷிப்ட் வசதி, போர்ஷே ஏர் சஸ்பென்ஷன், ஸ்போர்ட் ப்ளஸ் டிரைவிங் மோடு, போஸ் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், பார்க்அசிஸ்ட், சீட் ஹீட்டிங் வசதிகள் முக்கிய சிறப்பம்சங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

போர்ஷே ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட் சிஸ்டம், டைனமிக் லைட் சிஸ்டம், டைனமிக் ரன்னிங் லைட்ஸ், லேன் டிபார்ச்சர் வார்னிங், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், போர்ஷே டைனமிக் சேஸீ கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், போர்ஷே டிராக்ஷன் மேனேஜ்மென்ட் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை

டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை

கேயென் டீசல்: ரூ.1.04 கோடி

கேயென் எஸ்: ரூ.1.18 கோடி

கேயென் எஸ் டீசல்: ரூ.1.21 கோடி

கேயென் டர்போ: ரூ.1.78 கோடி

Most Read Articles
English summary
Porsche, the German luxury carmaker has launched the latest facelifted version of the Cayenne SUV. The facelift version gets a few changes mechanically and for the exterior.
Story first published: Tuesday, December 2, 2014, 17:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X