அடுத்த ஆண்டு புதிய எம்பிவி மற்றும் ஹேட்ச்பேக்கை களமிறக்கும் ரெனோ!

By Saravana

அடுத்த ஆண்டு புதிய ஹேட்ச்பேக் மற்றும் எம்பிவி கார்களை ரெனோ கார் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

அடுத்த ஆண்டு 3 ஆண்டுகளில் இந்திய கார் மார்க்கெட்டில் 5 சதவீத பங்களிப்பை பெறுவதற்கான திட்டங்களுடன் ரெனோ கார் நிறுவனம் தீவிர திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Reno Small Car

இந்த இலக்கை அடைவதற்கு ஏதுவாக புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்வதோடு, டீலர்ஷிப் கட்டமைப்பையும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஆல்ட்டோ காருக்கு நேரடி போட்டியை தரும் ஒரு புதிய ஹேட்ச்பேக் காரையும், எர்டிகாவுக்கு நேரடி போட்டியை தரும் வகையிலான ஒரு எம்பிவி கார் மாடலையும் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

இந்த தகவல்களை ரெனோ இந்தியா நிறுவனத்தின் சிஇஓ., சுமித் ஷானி உறுதிப்படுத்தியிருக்கிறார். நீண்ட கால அடிப்படையில் ஸ்திரமான வர்த்தகத்தை பெறும் வகையில், புதிய விரிவாக்கத் திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய ஹேட்ச்பேக் கார் மூலம் ஊரகப்பகுதிகளிலும் வலுவான அடித்தளத்தை பெற முடியும் என்று நம்புவதாகவும், எம்பிவி கார் மாடலுக்கும் நல்ல வரவேற்பு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Most Read Articles
English summary
French car maker Renault is planning to launch two new models next year, marking its entry into the volume and growth segments, a top company official said.
Story first published: Monday, December 15, 2014, 10:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X