கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட டஸ்ட்டர் 85 பிஎஸ் மாடல்!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ரெனோ டஸ்ட்டரின் 85 பிஎஸ் மாடல் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மாடலில் இருந்து பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களை 85 பிஎஸ் மாடலிலும் பயன்படுத்தியுள்ளது ரெனோ கார் நிறுவனம்.

Duster Updated

டஸ்ட்டர் 85 பிஎஸ் மாடலின் ஆர்எக்ஸ்எல் ப்ளஸ் மற்றும் ஆர்எக்ஸ்எல் ஆப்ஷன் பேக் வேரியண்ட்டுகளில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

கேபின் சப்தத்தை குறைக்கும் வகையில், கதவுகளில் புதிய ரப்பர் பீடிங் கொடுக்கப்பட்டுள்ளது இதேபோன்று, ஃபயர்வாலுக்கு அருகில் எஞ்சின் சப்தத்தை குறைக்கும் எஞ்சின் கவரை நீக்கிவிட்டு விசேஷ பாகம் பொருத்தப்பட்டுள்ளது.

தடிமன் கூடுதலான ஸ்டீயரிங் வீல் பொருத்தப்பட்டு, அதில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகளையும் கொடுத்துள்ளனர். இதுதவிர, வெள்ளை நிறத்தில் பேக்லிட் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், தனி டயலுடன் கூடிய டிரைவர் இன்பர்மேஷன் டிஸ்ப்ளே ஆகியவையும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய பீஜ் வண்ண டேஷ்போர்டு, புதிய ஃபேப்ரிக் இருக்கைகள், பியானோ பிளாக் கைப்பிடிகள் ஆகியவையும் டஸ்ட்டர் 85 பிஎஸ் மாடலின் கூடுதல் சிறப்பம்சங்கள். இந்த புதிய டஸ்ட்டர் 85 பிஎஸ் மாடல் எப்போது டீலர்ஷிப்புக்கு வரும் என்ற உறுதியானத் தகவல் இல்லை.

Most Read Articles
English summary
Renault India has silently updated the Duster 85 PS model. The RxL Plus and RxL (option) variants of the car were spotted at a dealership stockyard in Gurgaon. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X